Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
ஹிரோஷிமா எனது மனதின் வலி - திருத்தந்தையின் கடிதம் | வேரித்தாஸ் செய்திகள்
ஹிரோஷிமாவில் நடைபெற்றுவரும் G7 உச்சிமாநாட்டைக் குறித்து கடிதம் எழுதியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ், உலகை அழிக்கும் அணு ஆயுதங்களை வைத்திருப்பது பயம் மற்றும் நிச்சயமற்ற ஒரு சூழலை உருவாக்கி, அமைதியின் உண்மையான உருவத்தை மறைத்துவிட்டு ஒரு மாய பிம்பத்தையே நமக்கு நம் கண்முன்னே காட்டுகிறது என்று திருத்தந்தை வலியுறுத்தியுள்ளார்.
கடந்த மே 20 அன்று வத்திக்கான் அலுவலகம் ஒரு கடிதத்தை வெளியிட்டது, அந்த கடிதத்தில் தற்போது உலகளாவிய சமூகம் எதிர்கொள்ளும் அவசரப் பிரச்சினைகளைப் பற்றி விவாதிக்க ஹிரோஷிமாவில் G7 உச்சி மாநாடு கூடுகிறது. அதற்கு தனது செபங்கள் மூலமாக உலக அமைதிக்கு ஒப்புக்கொடுப்பதாக திருத்தந்தை உறுதியளித்துள்ளார்.
அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவதற்கான தொடர்ச்சியான அச்சுறுத்தலின் இந்த நேரத்தில், இந்த சந்திப்புக்கான இடமாக ஹிரோஷிமாவைத் தேர்ந்தெடுப்பது குறிப்பாக முக்கியத்துவம் வாய்ந்தது, என்று திருத்தந்தை பிரான்சிஸ் கூறினார்.
உலகப்போரில் உலகின் முதல் அணுகுண்டு தாக்குதல் நடத்தப்பட்ட இடம் ஹிரோஷிமா என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று ஆகஸ்ட் 6, 1945 இல், ஜப்பானிய நகரத்தின் மீது அமெரிக்கா அணுகுண்டை வீசியது, இதன் விளைவாக வெடித்த உடனேயே சுமார் 70,000 பேர் இறந்தனர் மற்றும் அந்த அணுகுண்டின் அணுவீச்சு மற்றும் அதன் விளைவாக ஆண்டின் இறுதியில் 140,000 பேர் இறந்தனர்.
மே 19 அன்று உச்சிமாநாட்டின் தொடக்க நாளில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் , பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி, ஜெர்மன் அதிபர் ஓலாஃப் ஷோல்ஸ், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா ஆகியோர் ஹிரோஷிமாவில் உள்ள அணுகுண்டுத் தாக்குதல் நடந்த இடத்தில் உள்ள அமைதி நினைவிடத்துக்குச் சென்று அங்கு அஞ்சலி செலுத்தினர்.
அணு ஆயுத நினைவின் சின்னமாக ஹிரோஷிமா, இன்றைய உலகின் அமைதிக்கான பெரும் சவாலாகவும், அச்சுறுத்தலாகவும் இருக்கும் தீவிரவாதத்திற்கும், தேசிய மற்றும் சர்வதேச பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் அணு ஆயுதங்களின் தேவையை வலுக்கட்டாயமாக இன்று பல நாடுகள் அணு ஆயுத தேவையை அறிவிக்கிறது என்று திருத்தந்தை பிரான்சிஸ் கூறினார்.
அணு ஆயுதங்கள் மற்றும் பிற பேரழிவு ஆயுதங்கள் அமைதியின் மீது ஒரு மாயையை மட்டுமே ஏற்படுத்தி அணு ஆயுதங்கள் ஒரு நாட்டின் அவசியம் பாதுக்காப்பு என்று கூறி உலக நாடுகளின் அச்சத்திற்கு, அணு ஆயுத பெருக்கத்தை இன்று தன்வசம் வைத்துக்கொண்டு அமைதியை பற்றி பேசுவது என்பது ஒரு முரணாகவே நான் பார்க்கிறேன் என்று திருத்தந்தை கூறினார்.
2019 ஆம் ஆண்டு திருத்தந்தையின் ஜப்பான் பயணத்தின் போது சமீபத்தில் G7 தலைவர்கள் பார்வையிட்ட அதே அமைதி நினைவிடத்திற்கு தனது பயணம் ஏற்படுத்திய மிகப்பெரிய வலி மிகுந்த தாக்கத்தை திருத்தந்தை பிரான்சிஸ் நினைவு கூர்ந்தார்.
அந்த இடத்தில அமைதியாக பிரார்த்தனையில் நின்று, பல வருடங்களுக்கு முன்னர் அணுகுண்டு தாக்குதலில் இறந்துபோன குழந்தைகள், பெண்கள், எதுவும் அறியாத அப்பாவிகளைப் பற்றி நினைத்துக்கொண்டு, போர் என்ற ஒற்றை வார்த்தைக்காக அணுசக்தியைப் பயன்படுத்துவது, முன்னெப்போதையும் விட இன்று ஒரு குற்றமாகும் என்ற திருப்பீடத்தின் உறுதியான நம்பிக்கையை மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன். மனித குலத்திற்கு எதிரானது மட்டுமல்ல மாறாக இந்த உலகத்திற்கே எதிரானது மற்றும் இந்த பூமியின் எதிர்காலத்திற்கும் எதிரானது, என்று அவர் கூறினார்.
கடந்த வெள்ளியன்று, G7 தலைவர்கள் ரஷ்யா மீது சிறப்பு கவனம் செலுத்தி, அணு ஆயுதக் குறைப்பு குறித்த தங்கள் முதல் அறிக்கையை வெளியிட்டனர்.
ரஷ்யாவின் பொறுப்பற்ற அணுகுமுறையால் அணுசக்தி வீச்சு, ஆயுதக் கட்டுப்பாடு, பிற நாடுகளின் ஆட்சிகளை குறைமதிப்பிற்கு உட்படுத்துதல் மற்றும் பெலாரஸில் அணு ஆயுதங்களை நிலைநிறுத்துவதற்கான நோக்கம் ஆகியவை ஆபத்தானவை மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்று வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைனுக்கு எதிரான அதன் ஆக்கிரமிப்பின் பின்னணியில், ரஷ்யாவின் அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவதற்கான ரஷ்யாவின் அச்சுறுத்தல்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்பதை நாங்கள் மீண்டும் வலியுறுத்துகிறோம் என்று G7 தலைவர்கள் தெரிவித்து உள்ளனர்.
வட கொரியா மற்றும் ஈரானின் அணு ஆயுதங்களை உருவாக்கும் முயற்சிகளை அவர்கள் விமர்சித்தனர் மேலும் சீனாவின் அணு ஆயுத விரிவாக்கம் உலக நாடுகள் மற்றும் உலகளாவிய அமைதிக்கு அச்சுறுத்தலாக உள்ளது என்று எச்சரித்தனர்.
ரஷ்யா முன்பு G7 குழுவின் ஒரு பகுதியாக இருந்தது - பின்னர் G8 என அறியப்பட்டது. 2014 இல் உக்ரைனிலிருந்து கிரிமியாவை இராணுவத்துடன் இணைத்ததன் காரணமாக அதிலிருந்து ரஷ்யா வெளியேற்றப்பட்டது.
திருத்தந்தை பிரான்சிஸ் தனது கடிதத்தில், உலகளாவிய பாதுகாப்பு ஒருங்கிணைந்ததாக இருக்க வேண்டும், உணவு மற்றும் நீர், சுற்றுச்சூழலுக்கு மரியாதை, சுகாதாரப் பாதுகாப்பு, எரிசக்தி ஆதாரங்கள் மற்றும் உலகப் பொருட்களின் சமமான விநியோகம் உள்ளிட்ட பிரச்சினைகளைத் தெளிவாக அறிந்து அதற்காக உலக நாடுகள் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று அடிக்கோடிட்டுக் காட்டினார்.
நாம் வாழும் இந்த 21 ஆம் நூற்றாண்டில் பலமுகம் கொண்ட உலகில் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம் அப்படிப்பட்ட உலகில் அமைதியைப் பின்தொடர்வது என்பது பாதுகாப்பின் தேவை நாம் வாழும் இந்த உலகம் நமக்காக படைக்கப்பட்டது இதில் அனைத்து உயிர்களும் இணைந்து வாழ வேண்டும் என்பது மட்டுமே நம் அனைவரின் நோக்கமாக இருக்க வேண்டும் என்று திருத்தந்தை தெளிவாக கூறியுள்ளார்.
_ அருள்பணி வி. ஜான்சன்
(News source from CNA)
Add new comment