மிகப்பெரிய கத்தோலிக்க உதவி அமைப்பை தடை செய்த நாடு | வேரித்தாஸ் செய்திகள்


 ஒர்டேகாவின்  சர்வாதிகார ஆட்சி  கத்தோலிக்க உதவி அமைப்பான கரித்தாஸ் நிகரகுவாவை கலைத்துள்ளது.

டேனியல் ஒர்டேகாவின் சர்வாதிகார அரசு  மத்திய அமெரிக்க நாட்டில் மிகவும் தேவைப்படுபவர்களுக்கு உதவும் கத்தோலிக்க திருஅவையின்  உதவி அமைப்பான  கரித்தாஸ் நிகரகுவாவை கலைத்தது.

அதிகாரப்பூர்வ அரசாங்க செய்தித்தாள் La Gaceta மார்ச் 7 அன்று உள்துறை அமைச்சகம் Caritas Jinotega மற்றும் Caritas Nicaragua ஆகியவற்றின் சட்டபூர்வ  அதிகாரத்தை  ரத்து செய்ததாக அறிவித்தது.

"2023  ஜனவரி 31 ஆம் தேதி, கரித்தாஸ் நிகரகுவாவின் உறுப்பினர்களின் அவசர  சபையின் சட்டம் எண். 79 மூலம், அவர்கள் அந்த அமைப்பைத் தன்னார்வமாகக் கலைக்க ஒப்புக்கொண்டனர். நிகரகுவா உள்துறை அமைச்சகத்தின் இலாப நோக்கற்ற நிறுவனங்களின் பதிவு மற்றும் கட்டுப்பாட்டின் பொது இயக்குநரகம்  தன்னார்வக் கலைப்பு மூலம் சட்டப்பூர்வமாக  நிறுவனத்தை ரத்து செய்ய வேண்டும்" என்று உள்துறை அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

பிற அமைப்புகளிடமிருந்து நன்கொடைகளைப் பெறுவதற்கு உள்துறை அமைச்சகம் அனுமதி மறுத்ததால், பிப்ரவரி தொடக்கத்தில் அதை மூட வேண்டும் என்று கரித்தாஸ் ஜினோடேகா அறிவித்தது.

 கரித்தாஸ் ஜினோடேகா அமைப்பானது நாட்டின் உள்ள ஏழை மக்களுக்கு உணவு,உடை, அடிப்படை தேவைகள்  மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான உபகரணங்கள்  ஊன்றுகோல் மற்றும் செயற்கை உறுப்புகளை நன்கொடையாக வழங்கியது, குறைந்த விலையில் மருந்துகளை வழங்கியது மற்றும் பல தொண்டுப் பணிகளை சிறப்பாக செய்து வந்தது.

 இந்த நிலையில் 2019 ஆம் ஆண்டில், நிகரகுவா ஆயர்கள்  மாநாட்டின் தற்போதைய தலைவரான ஜினோடெகாவின் ஆயர் கார்லோஸ் ஹெர்ரெரா குட்டிரெஸ், திருப்பலியில் பயன்படும் திராட்சை ரசம்   உட்பட சர்வதேச நன்கொடைகள் நுழைவதை நிகரகுவா அரசு தடை செய்துள்ளதை  அறிவித்தார்.

மேலும் புனித ஜான் பால் II கத்தோலிக்க பல்கலைக்கழகம் மற்றும் தன்னாட்சி கிறிஸ்தவ பல்கலைக்கழகம் ஆகிய இரண்டு பல்கலைக்கழகங்களை சர்வாதிகார நிகரகுவா அரசு  மூடிய அதே நாளில் காரித்தாஸ் அமைப்பும் மூடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

-அருள்பணி வி. ஜான்சன் 

(Sources from Catholic News Agency)

Add new comment

12 + 1 =