Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
பூனா மறைமாவட்டத்தின் புதிய ஆயர் ஜான் ரொட்ரிகோஸ் | வேரித்தாஸ் செய்திகள்
1967 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 21ஆம் நாள் பிறந்த ஆயர் ஜான் ரொட்ரிகோஸ் அவர்கள் இந்தியாவின் மும்பை மறைமாவட்ட அருள்பணியாளராக திருப்பொழிவு செய்யப்பட்டு, 2013 ஆம் ஆண்டு மும்பை மறைமாவட்ட துணை ஆயராக நியமிக்கப்பட்டார்.
இந்தியாவில் உள்ள பூனா மறைமாவட்டத்தின் புதிய ஆயராக மும்பையின் துணை ஆயர் ஜான் ரொட்ரிகோஸ் அவர்களை நியமித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
மார்ச் 25, சனிக்கிழமையன்று, பூனா மறைமாவட்டத்தின் முன்னாள் ஆயர் தாமஸ் தப்ரே அவர்கள் ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து அதன் புதிய ஆயராக, ஜான் ரொட்ரிகோஸ் அவர்களை அறிவித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்
1967ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 21ஆம் நாள் பிறந்த ஆயர் ஜான் ரொட்ரிகோஸ் அவர்கள், இந்தியாவின் மும்பை மறைமாவட்ட அருள்பணியாளராக 1998 ஆம் ஆண்டு ஏப்ரல் 18 ஆம் நாள் திருப்பொழிவு செய்யப்பட்டு, 2013 ஆம் ஆண்டு மே மாதம் 15 ஆம் நாள் மும்பை மறைமாவட்ட துணைஆயராக நியமிக்கப்பட்டார்.
1886ஆம் ஆண்டு செப்டம்பர் முதல் நாள் புதிய மறைமாவட்டமாக உருவான பூனா, 19191 சதுர கி.மீ. பரப்பளவு கொண்ட பகுதியாக பூனா, சத்தாரா,சோலாபூர், சங்கிலி, கோலக்பூர், இரத்னபுரி, மாவட்டங்களை உள்ளடக்கியதாகும்.
-அருள்பணி வி. ஜான்சன் SdC
(Source from Vatican News)
Add new comment