இரக்கம் அது நம் சுவாசம் - திருத்தந்தை | வேரித்தாஸ் செய்திகள்


சுவாசிக்கும் காற்றைப் போல இரக்கம் நமக்குத் தேவை
இத்தவக்காலத்தில் விருப்பத்துடன் மனம்மாறுதல், நம்மைத் தூய்மைப்படுத்த அனுமதித்தல், வாழ்க்கையை மாற்றுதல் போன்றவை நமது துணிவு மற்றும் வலிமையின் அடையாளம். - திருத்தந்தை பிரான்சிஸ்.

பாவிகளாகிய நமக்கு நாம் சுவாசிக்கும் காற்றைப் போல இரக்கம் தேவை என்றும், ஒப்புரவு அருளடையாளம் பயப்பட வேண்டிய மனித தீர்ப்பு அல்ல மாறாக ஒரு தெய்வீக அரவணைப்பிலிருந்து நாம் ஆறுதல் அடைவதற்கான வழி என்றும் தன் டுவிட்டர் பக்கத்தில் மூன்று குறுஞ்செய்திகளைப் பதிவிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மார்ச் 18 சனிக்கிழமை #24 மணி நேரம் இறைவனுடன் மற்றும் தவக்காலம் என்ற தலைப்புக்களில் மூன்று டுவிட்டர் குறுஞ்செய்திகளைப் பதிவிட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மீட்பு தேவைப்படுபவர்கள், இரக்கத்திற்காக மன்றாடுபவர்கள் தற்பெருமையின்றி, கடவுளுக்கு முன்பாக தங்களை முன்வைப்பவர்கள், இறைவனைக் கண்டடைவதால், அனைத்தையும் கண்டடைகின்றனர் என்பதை முதல் செய்தியாக பதிவிட்டுள்ளார்.

ஒப்புரவு அருளடையாளம் என்பது  இதயத்தை குணப்படுத்தி  உள்மன அமைதியை நமக்கு விட்டுச்செல்லும் ஒரு நிகழ்வாகும் என்றும், இது பயப்பட வேண்டிய மனித தீர்ப்பு அல்ல மாறாக ஒரு தெய்வீக அரவணைப்பிலிருந்து நாம் ஆறுதல் அடைவதற்கான வழி என்றும் இரண்டாவது செய்தியாகப் பதிவிட்டுள்ளார்.

மூன்றாவது குறுஞ்செய்தியில் பாவிகளாகிய நமக்கு, நாம் சுவாசிக்கும் காற்றைப் போல இரக்கம் தேவை என்றும், இத்தவக்காலத்தில் விருப்பத்துடன் மனம்மாறுதல், நம்மைத் தூய்மைப்படுத்த அனுமதித்தல், வாழ்க்கையை மாற்றுதல் போன்றவை நமது துணிவு மற்றும் வலிமையின் அடையாளம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

- அருள்பணி வி. ஜான்சன் 

(Source from Vatican News)

Add new comment

2 + 2 =