Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
மணிப்பூரின் இனக்கலவரம் குறித்து விசாரிக்க நீதி ஆணையம் | வேரித்தாஸ் செய்திகள்
மணிப்பூர் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக நீடித்து வரும் இனக்கலவரம் தொடர்பாக விசாரிக்க ஜூன் 1, 2023 அன்று இனக்கலவரம் குறித்து நீதி விசாரணைக்கு இந்தியாவின் மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இந்த கலவரத்தில் இதுவரை 70 க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளனர், ஆயிரக்கணக்கான மக்கள் காயமடைந்து, தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து, வீடுகளை இழந்து காடுகளில் தஞ்சம் அடைந்து உள்ளனர் எனபது குறிப்பிடத்தக்கது.
இந்த கலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூருக்கு நான்கு நாள் பயணமாக சென்ற அமித் ஷா, வன்முறைக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில் வன்முறைக்கான காரணத்தை நீதி ஆணையம் விசாரித்து, அதற்கு காரணமானவர்களை அடையாளம் கண்டு சட்டத்தின் முன்பு நிறுத்தப்படுவார்கள் என்று உறுதியளித்து மாநிலத்தில் ஏற்பட்டுள்ள கலவரத்தை கட்டுக்குள் கொண்டுவரவும் அமைதிக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
மே 3 அன்று, கிறிஸ்தவர்களை உள்ளடக்கிய குக்கி பழங்குடியின மக்களை பட்டியல் பழங்குடி (ST) மக்களாக அங்கீகரித்து அவர்களுக்கு பழங்குடி மக்கள் என அந்தஸ்து வழங்கும் நீதிபதியின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதன் மூலம் வேலை மற்றும் மற்றும் கல்வியில் இட ஒதுக்கீடு பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் மணிப்பூரி மாநிலத்தில் வாழும் 3.2 மில்லியன் மக்களில் 53 சதவீதம் பேர் மாநிலத்தின் சமூக-பொருளாதார நிலப்பரப்பில் ஆதிக்கம் செலுத்தும் மெய்டீஸில் கிறிஸ்தவர்களும் உள்ளனர். இதன் காரணமாக மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங் அரசின் மீது நம்பிக்கை இல்லாததால், கிறிஸ்தவர்கள் பெரும்பான்மையாக உள்ள குக்கி சமூகத்தினர் அமித் ஷாவிடம் குடியரசுத் தலைவர் ஆட்சியை கொண்டு வருமாறு கோரிக்கை வைத்தனர்.
இந்தியாவில் உள்ள மாநிலங்களில் சட்ட ஒழுங்கு சீர் கெடும்பொழுது அந்த மாநிலத்தை ஆட்சி செய்யும் அரசை இடைநீக்கம் செய்துவிட்டு குடியரசுத் தலைவர் ஆட்சி அங்கு கொண்டுவரப்படும் இதன்மூலம், மத்திய அரசு மாநிலத்தின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் அந்த மாநில அரசு செயல்படும். அனால் தற்போது மணிப்பூர் மாநிலத்தை பாரதிய ஜனதா கட்சியின் ஆதரவு பெற்ற கட்சி ஆட்சி செய்து வருவதால் உள்துறை அமைச்சர் அமித் ஷா அவர்களின் கோரிக்கைகளை ஏற்க மறுத்துவிட்டார்.
இருப்பினும் கலவரத்தை கட்டுக்குள் கொண்டுவர ஏற்படுத்தப்பட்ட அமைதிக் குழுவிற்கு ஒரு பழங்குடி பெண் அனுசுயா உய்கே, தொழிலதிபர்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் குகி இனம் மற்றும் மைடேய் இனத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் இருப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல இடங்களில் தொடர்ந்து வன்முறைகள், வீடுகளுக்கு தீ வைத்து கலவரத்தை தூண்டும் செயல்கள் நடைபெறுவதால் இந்த செய்திகள் பரவினால் நிலைமை இன்னும் மோசமாகும் என்னும் காரணத்தினால் மணிப்பூர் மாநில அரசு இணையதள சேவைக்கு உள்ள கட்டுப்பாடுகளை ஜூன் 5 வரை நீட்டித்துள்ளது.
மேலும் சில சமூக விரோத சக்திகள் சமூக ஊடகங்களை பரவலாகப் படங்களைப் பரப்புவதற்கும், வெறுப்பூட்டும் பேச்சு மற்றும் வெறுக்கத்தக்க வீடியோ செய்திகளை பரப்புவதற்கும், பொதுமக்களின் உணர்வுகளைத் தூண்டுவதற்கும் பயன்படுத்தக்கூடும் என்ற காரணத்தினாலும் இணைய தள சேவையை முடக்கியுள்ளது.
இந்த இனக்கலவரம் காரணமாக கிறிஸ்தவர்களும் பிற பழங்குடியினரும் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்று திருஅவை தலைவர்கள் ஜூன் 1 அன்று UCA செய்தியிடம் தெரிவித்துள்ளனர். மேலும்கிறிஸ்தவ நிறுவனங்கள், கிறிஸ்தவர்களின் வீடுகள் மற்றும் அவர்களின் உடமைகளை குறிவைத்து கலவரக்காரர்களால் தாக்கப்பட்டுள்ளனர். இதனால் 45,000 க்கும் மேற்பட்டோர் தங்களையம், தங்கள் குடும்பங்களை காப்பாற்றிக்கொள்ள பாதுகாப்பான இடம் தேடி இடம்பெயர்ந்துள்ளனர்.
திருஅவை தலைவர்களின் கூற்றுப்படி, எதிர்காலத்தில் பல கிராமங்களில் பழங்குடி மக்கள் இடையே அமைதி திரும்புவதற்கான அறிகுறிகள் எதுவும் தெரியவில்லை என்றும், எனவே அங்கு அமைதி திரும்ப வேண்டும் என்று இந்தியாவின் ஏழு வடகிழக்கு மாகாண மாநிலங்களை உள்ளடக்கிய வடகிழக்கு இந்திய மாநில ஆயர்கள் பேரவை வேண்டுகோள் விடுத்துள்ளது.
வடகிழக்கு இந்திய மாநில ஆயர்கள் பேரவையின் தலைவரான பேராயர் ஜான் மூலச்சிரா கூறுகையில், தொடர்ந்து மணிப்பூரில் நடந்து வரும் பயங்கரமான அவலங்களை நாங்கள் மிகவும் வேதனையுடனும், மிகுந்த கவலையுடனும் எதிர்கொண்டு வருகிறோம். இதனை முடிவுக்கு கொண்டு வர இந்த இனக்குழுக்களை ஒன்றிணைத்து அதன்மூலம் படைப்பாற்றல் மிக்க சிந்தனையாளர்கள், நிலைமையை எளிதாக்கவும், ஆக்கப்பூர்வமான மாற்றங்களை உருவாக்கவும், அனைவரும் வாழ்வில் முன்னேற வேண்டிய வழியைக் கண்டறியவும், வேறுபாடுகளைத் களையவும் வழிகளை உருவாக்குமாறு கேட்டுக்கொள்கிறோம் என்று ஆயர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
_ அருள்பணி வி. ஜான்சன்
(News source from RVA English News)
Add new comment