Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
இந்தியாவையே உலுக்கிய ரயில் விபத்து - திருத்தந்தை இரங்கல் | வேரித்தாஸ் செய்திகள்
சமீபத்தில் இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் நடந்த ரயில் விபத்தில் பலியானவர்களுக்காகவும் , விபத்தில் காயம் அடைந்து உறவுகளை இழந்த அனைவருக்கும் தனது நெருக்கத்தை வெளிப்படுத்தியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ். நேற்று நடந்த ஞாயிற்றுக்கிழமை திருப்பலியில் விபத்தில் இறந்துபோன அனைத்து ஆன்மாக்களுக்கும் அவர் மனம் கசிந்து திருப்பலி ஒப்புக்கொடுத்தார். இந்த விபத்தில் 300க்கும் மேற்பட்டவர்கள் பலியாகி இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இந்த கோர விபத்தில் காயமடைந்தவர்கள் மற்றும் இறந்துபோனவர்கள் என அவர்களது குடும்பத்தினருடன் என் இதயம் இருக்கிறது, அவர்களுடன் நான் ஜெபத்தில் ஒன்றாக இருந்து வருகிறேன். நமது விண்ணக தந்தை இறந்தவர்களின் ஆன்மாக்களை தம்முடைய விண்ணக வீட்டில் ஏற்று அவர்களுக்கு நித்திய இளைப்பாற்றியை தர வேண்டும் என்று திருத்தந்தை ஜூன் 4 அன்று தனது மூவேளை செப உரையில் கூறினார்.
ஒடிசா மாநிலத்தின் பாலசோர் மாவட்டத்தில் நடந்த விபத்தில் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர், இது கடந்த இருபது வருடங்களில் நடந்த விபத்துகளில் இந்தியாவின் மிக மோசமான ரயில் விபத்து இதுதான் என்று கூறப்படுகிறது.
பயணிகள் ரயிலின் எலக்ட்ரானிக் சிக்னல் அமைப்பில் ஏற்பட்ட பிழையால், அது தடம் மாறி மற்றொரு ரயிலில் மோதி, தடம் புரண்டதால் இந்த விபத்து ஏற்பட்டது என்று கூறப்படுகிறது. இரண்டு ரயில்களும் மோதிய போது மொத்தம் 2,296 பேர் பயணம் செய்தனர் எனபது குறிப்பிடத்தக்கது.
விபத்து நடந்த மறுநாள் இந்தியாவின் அப்போஸ்தலிக்க தூதுவர் பேராயர் லியோபோல்டோ கிரெல்லிக்கு திருத்தந்தை இரங்கல் தந்தி அனுப்பினார்.
வத்திக்கான் மாநிலச் செயலர் கர்தினால் பியட்ரோ பரோலின் திருத்தந்தையின் சார்பாக அனுப்பிய தந்தியில் கூறியிருப்பதாவது: இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் நடந்த ரயில் விபத்தால் ஏற்பட்ட உயிரிழப்புகளை அறிந்து மிகவும் வருத்தமடைந்த திருத்தந்தை பிரான்சிஸ், இந்த துயரத்தால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் . அவரது ஆன்மீக நெருக்கம் மற்றும் தனது நொறுங்கிய இதயத்துடன் தனது அன்பையும் உறுதியளிக்கிறார்.
மேலும் இறந்தவர்களின் ஆன்மாக்களை எல்லாம் வல்ல இறைவனின் அன்பான கருணைக்கு ஒப்படைத்து, அவர்களின் இழப்பால் வாடும் அன்பானவர்கள் அனைவர்க்கும் அவர் தனது இதயப்பூர்வமான இரங்கலை அனுப்பியுள்ளார். இந்த விபத்தில் காயமடைந்த பலருக்காகவும், அவசரகால சேவை பணியாளர்களின் முயற்சிகளுக்காகவும் மேலும் அவர்களுக்கு தைரியம் மற்றும் ஆறுதல் அளித்து இறைவன் இவர்களை திடப்படுத்தி அனைத்து உள்ளங்களுக்கும் அமைதியை வழங்க வேண்டும் என்று திருத்தந்தை தனது செய்திக்குறிப்பில் குறிப்பிட்டுள்ளார்.
-அருள்பணி வி.ஜான்சன்
(News Source from CNN)
Add new comment