Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
உறவுகள் மேம்பட தவக்காலம் | வேரித்தாஸ் செய்திகள்
தவக்காலம் என்பது நமது உறவுகளை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான அருளின் காலம் : திருத்தந்தை
சாம்பலை நெற்றியில் பூசுவது என்பது நம்மையும், கடவுளையும், நமது சகோதர சகோதரிகளையும் பற்றிய உண்மைக்குத் திரும்புவதாகும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் சாம்பல் புதன் அன்று திருப்பலியில் அறிவுறுத்தினார்.
சாம்பல் நாம் யார் என்பதை நமக்கு நினைவூட்டுகிறது "நம் வாழ்வின் இன்றியமையாத உண்மை, இறைவன் ஒருவரே கடவுள் நாம் அவருடைய கைகளின் வெளிப்பாட்டில் உருவான படைப்புகள்.
நமது கத்தோலிக்க சமயத்தில் தவக்காலம் சாம்பல் புதன் அன்று தொடங்கி புனித வியாழன் அன்று சூரியன் மறையும் வேளையில் முடிவடைகிறது.
எல்லோரும் தன்னை பற்றி உள்ள உயர்வான அனுமானத்தையும் மற்றும் அனைத்து வகையான உருவ வழிபாட்டையும் கைவிடுமாறு அனைவரையும் அவர் அழைத்தார்.
தவக்காலம் என்பது நாம் கடவுளை நம்பியிருப்பதையும், நான் மட்டுமே நல்லவன் என்ற பாசாங்குகளை கைவிட வேண்டும்" என்பதையும் நினைவில் கொள்ள வேண்டிய நேரம்.
கடவுளிடமும் நமது சகோதர சகோதரிகளிடமும் திரும்பும் பயணத்தை திருத்தந்தை எடுத்துரைத்தார்,
"வாழ்க்கை என்பது கடவுளிடமிருந்தும் நம் பெற்றோரிடமிருந்தும் நாம் பெறும் உறவு" என்பதை அறிய அவர் முன்மொழிந்தார், மேலும் நாம் எப்போதும் நம் உறவுகளை புதுப்பிக்கவும் அவர்களோடு அன்போடு வாழவும் அழைப்பு பெற இந்த தவக்காலம் அழைப்பு விடுகின்றது.
தவக்காலம், கடவுளுடனும் மற்றவர்களுடனும் நம் உறவை மீண்டும் கட்டியெழுப்பவும், ஜெபத்தின் மௌனத்தில் நம் இதயங்களைத் திறந்து, நான் மட்டுமே நல்லவன் என்ற சுயநல கோட்டையிலிருந்து வெளிவரவும் உதவும் மகிமையுள்ள காலம் என்று திருத்தந்தை பிரான்சிஸ் கூறினார்.
பாரம்பரிய கத்தோலிக்க நோன்புப் பழக்கமான நோன்பு, பிரார்த்தனை மற்றும் நற்கருணையை முழு மனதுடன் கொண்டாட திருத்தந்தை பிரான்சிஸ் அழைப்பு விடுத்தார்.
ஏழைகளுக்கு உதவுதல் , பிரார்த்தனை மற்றும் உண்ணாவிரதம் ஆகியவை வெறுமனே வெளிப்புறக் காட்சிகளாக இருக்காமால் நாம் உண்மையில் என்னவாக இருக்கிறோம் என்பதை வெளிப்படுத்தும் கருவிகளாகவும் கடவுளின் குழந்தைகள் ஒருவருக்கொருவர் சகோதர சகோதரிகள் என்ற உணர்வுடன் வாழ வேண்டும் என்று திருத்தந்தை வலியுறுத்தினார்.
சாம்பல் ,சிலுவையின் மீது பார்வையை நிலைநிறுத்தி, தவக்காலத்தின் சக்திவாய்ந்த தூண்டுதல்களுக்கு தாராள மனதுடன் பதிலளிப்பதன் மூலம், “பயணத்தின் முடிவில், வாழ்க்கையில் இறைவனை நாம் மிகுந்த மகிழ்ச்சியுடன் சந்திப்போம், அவர் ஒருவரே நம்மை நம்மிலிருந்து உயர்த்த முடியும் என்ற மையக்கருத்தை நம் கண்முன்னே வைக்கிறது.
அருள்பணி வி. ஜான்சன்
(Source from RVA English news)
Add new comment