மலேசிய ஆயர் செபாஸ்டியன் பிரான்சிஸ், FABC-OSC இன் தலைவர் | வேரித்தாஸ் செய்திகள்


மலேசியாவின் பினாங்கின் பிஷப் செபாஸ்டியன் பிரான்சிஸ் அவர்கள் FABC சமூக தொடர்பு அலுவலகத்தின் (OSC) தலைவராக மூன்று வருட காலத்திற்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

FABC சார்பாக, ஜனவரி 01, 2023 முதல் மூன்று ஆண்டுகளுக்கு FABC சமூக தொடர்பு அலுவலகத்தின் (OSC) தலைவராக உங்களை நியமிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்" என்று FABC இன் தலைவர் கார்டினல் சார்லஸ் போ கூறினார். 

நியமனக் கடிதத்தில் சமூக தகவல்தொடர்புகள் மூலம் ஆசியாவில் உள்ள திருச்சபையின் ஆயர் ஊழியத்தை வலுப்படுத்த FABC OSC ஐ ஒரு துடிப்பான மற்றும் பயனுள்ள கருவியாக மாற்றுவதற்கான பணி தலைவருக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது.

கர்தினால்  போ தனது கடிதத்தில், "FABC-OSCக்கு FABC ஒப்படைத்துள்ள முக்கியமான பொறுப்புகளில் ஒன்று ரேடியோ வேரித்தாஸ் ஆசியாவின் (RVA) மேலாண்மை மற்றும் நிர்வாகமாகும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

"உங்கள் அனுபவத்துடனும் திறமையுடனும் ஆசிய மக்களுக்கு நற்செய்தியை அறிவிக்கும் பணியில் RVA ஐ வழிநடத்த முடியும் என்று நான் நம்புகிறேன்" என்று கர்தினால் போ கூறினார்.

ஆயர்  செபாஸ்டியன் பிரான்சிஸ் 1951 ஆம் ஆண்டு நவம்பர் 11 ஆம் தேதி ஜோகூர் பாருவில் பிறந்தார், அது அப்போது மலாயா கூட்டமைப்பின் ஒரு பகுதியாக இருந்தது. 1967 முதல் 1970 வரை, அவர் சிங்கப்பூரில் உள்ள புனித  பிரான்சிஸ் சேவியர்ஸ் இளம் குருமடத்தில்  சேர்ந்தார், கல்லூரி படிப்பை  பினாங்கில் 1972 முதல் 1976 வரை நிறைவு செய்து  அவர் 28 ஜூலை 1977 இல் மலாக்கா-ஜோகூர் மறைமாவட்டத்தில் அருள்பணியாளராக  நியமிக்கப்பட்டார்.

1983 வரை, தந்தை செபாஸ்டியன் பிரான்சிஸ் இத்தாலியின் ரோமில் உள்ள புனித  தாமஸ் அக்வினாஸ் பல்கலைக்கழகத்தில் இறையியல் கோட்பாட்டில் பட்டம்  பெற்றார். மேலும்  அவர் அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள மேரிக்னோல் இறை இயல் பள்ளியில்   படித்தார், அங்கு அவர் 1991 இல் நீதி மற்றும் அமைதியில் பட்டம் பெற்றார்.

2003 ஆம் ஆண்டில், செபாஸ்டியன் பிரான்சிஸ் மலாக்கா-ஜோகூர் மறைமாவட்டத்திற்கு முதன்மை குருவாக  நியமிக்கப்பட்டார், அவர் ஜூலை 7, 2012 இல் திருத்தந்தை  பெனடிக்ட் XVI அவர்களால்  பினாங்கு ஆயராக  நியமிக்கப்பட்டார் . ஆயர்  செபாஸ்டியன் பிரான்சிஸின் ஆயர் நியமனம் புக்கிட் மெர்தாஜாமில் உள்ள புனித அன்னாள் தேவாலயத்தில் ஆகஸ்ட் 21, 2012 அன்று நடைபெற்றது.

-அருள்பணி .வி .ஜான்சன் 

(source from RVA English news)

Add new comment

3 + 0 =