இந்திய கர்தினால் பிலிப் நேரி பெர்ரோ நற்செய்தி அறிவிப்பு பேராயத்தின் உறுப்பினர் - திருத்தந்தை நியமனம் | வேரித்தாஸ் செய்திகள்


இந்திய கத்தோலிக்க ஆயர்கள் மாநாட்டின் (CCBI) தலைவர் கர்தினால் பிலிப் நேரி ஃபெரோ
ஏப்ரல் 25, 2023 அன்று, திருத்தந்தை  பிரான்சிஸ் அவர்கள்  கோவா மற்றும் டாமன் பேராயர், இந்திய கத்தோலிக்க ஆயர்கள் மாநாட்டின் (CCBI) தலைவரான கர்தினால் ஃபிலிப் நேரி ஃபெரோவை, உலகில் நற்செய்தி அறிவிப்பின்  அடிப்படைப் பிரச்சினைகளுக்கான பிரிவின் உறுப்பினராக நியமித்தார்.

ஜூபிலி ஆண்டு 2025 என்றும் அழைக்கப்படும் வரவிருக்கும் புனித ஆண்டை மேற்பார்வையிடும் இந்தப் பிரிவிற்கு பேராயர் ரினோ பிசிசெல்லா தலைமை தாங்குகிறார்.

அக்டோபர் 7, 2022 அன்று, கர்தினால்  ஃபெரோவும் நற்செய்தி அறிவிப்பு பேராயத்தின்  உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவரை ஆகஸ்ட் 27, 2022 அன்று சாண்டா மரியாவின் கர்தினாலாக  நியமித்தார்.

கர்தினால்  ஃபெரோ ஜனவரி 20, 1953 அன்று கோவா மற்றும் டாமன் பேராயத்திலுள்ள அல்டோனாவில் பிறந்தார். ஒரு குருவாக , அவர் அக்டோபர் 28, 1979 இல் அருள்பொழிவு செய்யப்பட்டார்.

கோவா மற்றும் டாமனின் துணை ஆயராக, அவர் டிசம்பர் 20, 1993 இல் வனாரியோனாவின் பட்டம்சார்  ஆயராக நியமிக்கப்பட்டார், மேலும் ஏப்ரல் 10, 1994 இல் பட்டம்சார்  ஆயராக அருள்பொழிவு செய்யப்பட்டார்.

கோவா மற்றும் டாமன் பேராயர் மற்றும் கிழக்கிந்தியத் தீவுகளின் மறைத்தந்தையாக  அவரது நியமனம் டிசம்பர் 12, 2003 அன்று நடந்தது, மேலும் அவர் மார்ச் 21, 2004 இல் பதவியேற்றார்.

 2019 இல் சென்னையில் நடந்த அதன் 31வது பொது மாநாட்டில்  இந்திய கத்தோலிக்க ஆயர்கள் பேரவை இவரை  தலைவராகத் தேர்ந்தெடுத்தது.

இவர் கத்தோலிக்க ஆயர்கள் பேரவையின் இந்திய கத்தோலிக்க நம்பிக்கையாளர்களின்  ஆணையத்தின் தலைவராகவும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

_ அருள்பணி வி.ஜான்சன் SdC
(Updates from RVA English News)

Add new comment

3 + 5 =