கத்தோலிக்க விவிலிய மாநாட்டில் ஆசியாவில் இருந்து ஆயர் பீட்டர் அபீர் அந்தோணிசாமி | வேரித்தாஸ் செய்திகள்


அர்ஜென்டினாவில் நடைபெற்று வரும் கத்தோலிக்க விவிலிய கூட்டமைப்பின் (CBF) 10வது விவிலிய  மாநாட்டில் ஆசியாவில் இருந்து பல ஆயர்கள்  மற்றும் விவிலிய  அறிஞர்கள் கலந்து கொள்கின்றனர்.

இந்த நிகழ்வு தென் அமெரிக்காவின் அர்ஜென்டினாவில் உள்ள மார் டெல் பிளாட்டா மறைமாவட்டத்தில் நடைபெறுகிறது.

ஏப்ரல் 15  முதல் 21 வரை இந்த மாநாடு நடைபெறும் , இறை வார்த்தையை பறைசாற்றுங்கள் அதுதான்  பலவீனமான உலகத்திற்கான வாழ்வின் ஆதாரம் என்ற மையப்பொருளை கொண்டு செயல்படும்.

 200 க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் 90 க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து வருகிறார்கள், உலகெங்கிலும் உள்ள பல்வேறு ஆயர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்கின்றனர், மேலும் நூற்றுக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இந்த மாநாட்டில்   இணைக்கப்பட்டுள்ளன.

ஏப்ரல் 16 அன்று, மார் டெல் பிளாட்டா ஆயர்  கேப்ரியல் மேஸ்ட்ரே தொடக்க திருப்பலிக்குத்  தலைமை தாங்கினார். 

அவர் தனது மறையுரையில்  மார் டெல் பிளாட்டா மறைமாவட்டத்திற்கும் வந்திருந்த அனைவரையும் வரவேற்றார். 

 நாம் அனைவரும் கடவுளுக்கு நன்றி கூற கடைமைபட்டுள்ளோம்  ஏனென்றால் நாம் அனைவரும்  உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் இந்த முக்கியமான மாநாட்டிற்காக கூடி வந்துள்ளோம். எனவே இந்த  முக்கியமான தருணத்தில் ஒன்று  கூடி, கடவுளின் வார்த்தை ஒரு பலவீனமான உலகத்திற்கு வாழ்வின் ஆதாரமாக உள்ளது என்று நற்செய்தி பறைசாற்றுவதற்காக நாம் இணைத்துள்ளோம்  என்று பேராயர் கூறினார்.

 இன்றும் எப்பொழுதும், நமது பலவீனமான உலகத்திற்கான வாழ்வின் ஆதாரமான கடவுளின் வார்த்தையைப் பறைசாற்ற  விரும்புகிறோம். 10வது நிறைவு விழாவைக் கொண்டாடும் இந்த நாட்களில் ஆசீர்வதிக்கப்பட்ட கன்னி மரியாவின் பரிந்துரையுடன் நாம்  இதனை செய்கிறோம்," என்று அவர் மேலும் கூறினார்.

 நாம் அனைவரும்  ஒன்றாக நமது  திருமுழுக்கின் நம்பிக்கையை புதுப்பித்து, ஒரு முக்கியமான பேரவையில் , நமது  தனிப்பட்ட மற்றும் உலகளாவிய வரலாற்றில் ஈடுபட விரும்புகிறோம். அதனால்தான் நாம் அனைவரும்  ஒரு குரலாய் உறக்கச் சொல்வோம்  நாம் அனைவ்ரும் ஒன்றாகப்  பயணிக்கிரோம்   கிறிஸ்துவை அன்பின் கருவியாக  நம்புகிறோம், நமது உலகின் பலவீனத்தின் போது இரக்கத்துடன் அவரை அறிவிக்கிறோம் என்று ஆயர் கூறினார். 

விவிலிய தலைப்புகளில் பணிபுரியும் பிரதிநிதிகளுடன் மத்திய விடுதியில்  இந்த மாநாடு  தொடங்கியது.

அருள்பணி ஜான் ஸ்டெபானோவ் SVD  கத்தோலிக்க விவிலிய கூட்டமைப்பின் பொதுச் செயலாளர்,  அதன் தலைவர் கர்தினால்  லூயிஸ் அன்டோனியோ டாக்லேவின் பதிவு செய்யப்பட்ட செய்தியை வழங்கினார், அவர் அங்கு வந்திருந்த அனைவரையும் வாழ்த்தி  பலவீனமான இந்த  உலகத்திற்கான வாழ்வின் ஆதாரமாக வார்த்தையைப் பறைசாற்ற அனைவருக்கும் " அழைப்பு விடுத்தார்.

பின்னர் 10வது கத்தோலிக்க விவிலிய  பேரவையின் செயல்பாடுகள் தொடங்கியது.

அனைத்து கண்டங்களிலிருந்தும் 14 ஆயர்கள் மார் டெல் பிளாட்டா பேராலயத்தில் திருப்பலி  நிறைவேற்றினார்கள் . இவர்களில்  ஏழு பேர்  ஆங்கிலம் பேசும் ஆயர்கள், ஐந்து பேர் ஹிஸ்பானிக் பேசும் ஆயர்கள்  மற்றும் இரண்டு பிராங்கோஃபோன்கள் பேசும் ஆயர்கள் கலந்து கொண்டனர்.

ஆசியாவிலிருந்து, பீட்டர் அபிர் அந்தோனிசாமி (இந்தியா), பிரான்சிஸ் அர்போண்ட்ரதானா டர்ன் (தாய்லாந்து), இந்திரியாஸ் ரெஹ்மத் (பாகிஸ்தான்), மற்றும் பாப்லோ விர்ஜிலியோ டேவிட் (பிலிப்பைன்ஸ்) ஆகியோர் ஆசியாவில் இருந்து கலந்து கொண்ட ஆயர்கள் என்பது குறிப்பிடதக்கது.

இரண்டாம் நாள் (ஏப்ரல் 17), பிரதிநிதிகள் மார் டெல் பிளாட்டா மறைமாவட்டத்தில் ஒரு வித்தியாசமான அனுபவத்தைப் பெற்றனர். பங்கேற்பாளர்கள் ஆறு அப்போஸ்தலிக்கப் பகுதிகளுக்குச் சென்று மறைமாவட்ட மேய்ப்பு பணிகள்  மற்றும் சகோதர சந்திப்பின் சில அம்சங்களை பார்வையாளர்களுக்கு அறிமுகப்படுத்தினர். ஒவ்வொரு இடத்திலும், அவர்கள் ஒரு சிறிய உரையாடல் பிரார்த்தனை சிந்தனையின் ஒரு தருணம் மற்றும் அந்த இடத்தில் திருப்பலி நிறைவேற்றி தங்களது  அன்பினை பகிர்ந்து கொண்டனர்.

புனித விவிலியத்தின்  வல்லுநர்கள் மற்றும் அறிஞர்கள், இறையியலாளர்கள் மற்றும் மேய்ப்பு பணியாளர்கள்  ஒவ்வொரு திருஅவை  நடவடிக்கைகளும்  இறை வார்த்தையின் முக்கியத்துவத்தைப் பிரதிபலிக்கும் ஒரு மதிப்புமிக்க வாய்ப்பாகும். கூட்டமைப்பு முன்னோக்கிப் பார்க்கும்போது, ​​அது விவிலியத்தைப்  பற்றிய ஆழமான புரிதலை ஊக்குவிப்பதோடு வாழ்விலும் நற்செய்தி  பணியிலும் அதன் பயன்பாட்டை ஊக்குவிக்கும்.

மூன்றாம் நாள் (ஏப்ரல் 18), பங்கேற்பாளர்கள் சமூக மற்றும் இயற்கை உலகம்  மற்றும் கத்தோலிக்க திருஅவையின் பலவீனத்தை பகுப்பாய்வு செய்தனர். கோரோனா வைரஸால் ஏற்பட்டுள்ள சுகாதார சீர்கேடு  மனித குறைபாடுகளை வெளிப்படுத்தியுள்ளது. எனவே இறை வார்த்தையில் வெளிச்சத்தைத் தேடுவதற்கும், மனிதகுலத்தின் புதிய சவால்களை திறம்பட எதிர்கொள்வதற்கும் இந்த சிக்கல்களின் பகுப்பாய்வைத் தொடங்குவது முக்கியம்.

இந்த மாநாடு நாடுகள்  மற்றும் கண்ட எல்லைகளுக்கு அப்பால் நற்செய்தி பரிமாற்றம் மற்றும் பிரதிபலிப்பு இடமாக பார்க்கப்படுகிறது. புனித விவிலியத்தின்  வல்லுநர்கள் மற்றும் அறிஞர்கள், இறையியலாளர்கள் மற்றும் ஆயர்கள் மற்றும் அவர்களின் முகவர்கள் , அனைத்து திருஅவை  நடவடிக்கைகளிலும் இறை வார்த்தையின் முக்கியத்துவத்தைப் பிரதிபலிக்க இது ஒரு மதிப்புமிக்க வாய்ப்பாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

 - அருள்பணி வி. ஜான்சன்
(Source from RVA English News)

Add new comment

2 + 3 =