Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
ரேடியோ வேரித்தாஸ் ஆசியா 54வது ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது | வேரித்தாஸ் செய்திகள்
ரேடியோ வேரித்தாஸ் ஆசியா ஏப்ரல் 11, 2023 அன்று தனது 54வது ஆண்டில் அடி எடுத்து வைத்து அதன் பணிகளை தொடர ஆர்வம் காட்டி வருகிறது.
திருத்தந்தையின் வார்த்தைகள் மற்றும் ஆசீர்வாதங்களால் ஈர்க்கப்பட்டு, பலப்படுத்தப்பட்டு, ஆசியாவில் உள்ள கத்தோலிக்க திருஅவையின் ஊடக தளமான ரேடியோ வேரித்தாஸ் ஆசியா (RVA), அதன் 54 ஆண்டுகால தொடர் ஓட்டத்துடன் மேலும் இன்னும் அதிகமாக தனது சேவையைத் தொடர உறுதிபூண்டுள்ளது.
இந்த மாபெரும் நிறுவனமும், இந்த நிறுவனத்தின் முக்கியமான பணியும் கிறிஸ்துவின் போதனைகளை எதிரொலிக்க வேண்டும் மற்றும் கடவுளின் உண்மை மற்றும் அன்பிற்கு இதயங்களை உயர்த்த வேண்டும் என்று திருத்தந்தை ஆறாம் பால்1970 இல் வானொலி நிலையத்திற்குச் சென்று ஆசீர்வதித்தபோது கூறினார்.
திருத்தந்தை இரண்டாம் ஜான்பால் அவர் திருத்தந்தையாக இருந்தபோது 1981 இல் வருகை தந்தபோது ஆசிய கிறிஸ்தவத்தின் குரல் என்று இந்த பணியினை விவரித்தார். அதற்கு முந்தைய ஆண்டு ரோமில் நடந்த சிறப்பு ஆயர் கூட்டத்திற்குப் பிறகு, 1999 இல் தனது அப்போஸ்தலிக்க அறிவுரையில், ஆசியாவில் அவரது திருஅவைசார் பணியை திரும்பி பார்க்கும்பொழுது இந்த வானொலி நிலையம் ஒரு சிறந்த கருவி என்று கூறினார்.
1958 ஆம் ஆண்டில், ஆசியா மற்றும் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஆயர்கள் கூட்டம் மணிலாவில் உள்ள சாண்டோ டோமாஸ் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. அந்த நிகழ்வின் முக்கியமான அம்சம் ஒன்று, ஆசியாவில் ஒரு கத்தோலிக்க வானொலி நிலையம் ஒன்றை உருவாக்குவது அதன் மூலம் நற்செய்தி அறிவிப்பு பணியை மேலும் விரிவுபடுத்துவதாகும்.
1963 ஆம் ஆண்டு இரண்டாம் வத்திக்கான் சங்கத்தின் சமூக தொடர்புக்கான வழிமுறைகள் உருவாக்குவதற்கு ஐந்தாண்டுகள் முன்னதாகவே பேராயர்களிடம் இது தொடர்பான யோசனை இருந்தது. இரண்டாம் வத்திக்கான் சங்கத்தின் 16 திருஅவை படிப்பினை ஆவணங்களில் ஒன்றான சமூக தொடர்புக்கான வழிமுறைகள் முறையை திருஅவை பயன்படுத்தும் என்று கூறுகிறது. நற்செய்தியை பரப்ப ஊடகங்கள் தேவை மாறிவரும் காலநிலைக்கு தகுந்தவாறு ஊடகங்களை பயன்படுத்த வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.
அந்த முடிவினை செயல்படுத்த ஆசியாவில் கத்தோலிக்கர்கள் அதிகம் வாழும் பிலிப்பைன்ஸில் வானொலி நிலையத்தை அமைக்க ஆயர்கள் முடிவு செய்தனர்.
ஜெர்மன் நாட்டில் வாழும் கத்தோலிக்கர்களின் ஆதரவுடன், பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள க்யூசான் சிட்டியில் உள்ள ஃபேர்வியூவில் ரேடியோ முதல் ஒளிபரப்பு வசதி ஏப்ரல் 11, 1969 அன்று வத்திக்கான் அதிகாரி கர்தினால் அன்டோனியோ சமோர் மற்றும் அந்த நேரத்தில் மணிலாவின் பேராயராக இருந்த கர்தினால் ரூஃபினோ சாண்டோஸ் ஆகியோரால் திறக்கப்பட்டது.
ஜோஸ் யூலோ என்ற தியாக உள்ளம் கொண்ட குடும்பத்தினர் நன்கொடையாக வழங்கிய சொத்தில் வானொலி நிலையம் கட்டப்பட்டது.
கத்தோலிக்க திருஅவை கண்ட முதல் வானொலி நிலையமாக ரேடியோ வேரித்தாஸ் மாறியது.
1967 இல், சோதனை ஒளிபரப்பு தொடங்கியது. ஏப்ரல் 11, 1969 இல், இரண்டு 100 KW டிரான்ஸ்மிட்டர்களுடன் முதல் வெளிநாட்டு ஒளிபரப்பு தொடங்கியது.
தொழில்நுட்ப முன்னேற்றத்தைப் பயன்படுத்தி, ரேடியோ வேரித்தாஸ் 2018 இல் குறு அலை -ரேடியோவிலிருந்து சமூக வலை தளங்களுக்கு இடம்பெயர்ந்தது.
விருதுகள் :
பிப்ரவரி 18, 2023 அன்று கத்தோலிக்க சமூக ஊடக விருதுகள் வழங்கும் விழாவில் ரேடியோ வேரித்தாஸ் (RVA ) ஐ சிறந்த கத்தோலிக்க அமைப்பின் இணையதளமாக அங்கீகரித்தது. ஆங்கிலத்தில் உள்ள இணையதளம் மிகசிறந்த கத்தோலிக்க ஊடகம் என்ற விருதைப் பெற்றது. இணையதளங்கள் மற்றும் சமூக ஊடகங்களில், ரேடியோ வேரித்தாஸ் (RVA ) உள்ளடக்கம் ஆங்கிலம் மற்றும் 21 ஆசிய மொழிகளில் பகிரப்படுகிறது.
ரேடியோ வேரித்தாஸ் பத்திரிகை, இலக்கியம் மற்றும் ஆக்கப்பூர்வமான தகவல் தொடர்பு கலைக்கான ராமன் மகசேசே விருதையும் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 1983 இல் சென். பெனிக்னோ அக்வினோ என்ற பெண்ணின் படுகொலை மற்றும் 1986 இல் EDSA கிளர்ச்சி அதாவது மக்கள் கிளர்ச்சி ஆகியவற்றின் தொகுப்பிறகாக இது அங்கீகரிக்கப்பட்டது. ரமோன் மகசேசே விருது ஆசியாவிலேயே மிகவும் மதிப்புமிக்கதாகும் அந்த விருதினை ரேடியோ வேரித்தாஸ் பெற்றது
EDSA என்ற மக்கள் எழுச்சியைப் பற்றிய ரேடியோ வேரித்தாஸ் இன் பதிவு செய்யப்பட்ட தொகுப்பு இன்றும் காப்பகங்களில் சேமிக்கப்பட்டுள்ளது. மேலும், தொகுப்பு ஆடியோ பதிப்பு யுனெஸ்கோவின் உலகின் நினைவலைகள் என்ற நிகழ்ச்சியில் பதிவு செய்யப்பட்டது. குறிப்பாக போர்கள் மற்றும் இயற்கை பேரிடர்களால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆவணப்பட பாரம்பரியத்தை பாதுகாக்க உதவுவதை இந்த திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
1986 இல் "மக்கள் சக்தி புரட்சி" என்றும் அழைக்கப்படும் EDSA எழுச்சி, மார்கோஸின் சர்வாதிகார ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்தது. பிலிப்பைன்ஸை மார்கோஸ் 21 ஆண்டுகள் ஆட்சி செய்தார் அவரின் சர்வாதிகார ஆட்சியை எதிர்த்து மக்கள் கொண்டு வந்த புரட்சியே மக்கள் சக்தி புரட்சியாக மாறியது.
ஆற்றும் பணிகள்
ரேடியோ வேரித்தாஸ் பல திட்டங்கள் மூலம் குறைந்த வருமானம் உள்ள மக்களுக்கு நீதியை பரிந்துரைக்கிறது. இது பிரிவுகள், இனங்கள் மற்றும் பாலினங்களிடையே அமைதி மற்றும் நல்லிணக்கத்திற்கான குரலாக பணியாற்ற முயல்கிறது. பல்வேறு மத நம்பிக்கைகளுக்கு இடையேயான உரையாடலையும் ரேடியோ வேரித்தாஸ் ஆதரிக்கிறது.
அக்டோபர் 12, 2022 அன்று, ரேடியோ வேரித்தாஸ் Iglesia ni Cristo (INC) என்ற தேவாலயத்தின் உறுப்பினர்கள் ஓவியம் மூலம் மனிதகுலத்தையும் சுற்றுச்சூழலையும் மிக அருமையாக வெளிப்படுத்தி உள்ளனர். உறுப்பினர் எண்ணிக்கையில் பிலிப்பைன்ஸில் உள்ள 3வது பெரிய தேவாலயமாக INC உள்ளது.
அக்டோபர் 6, 2022 அன்று வறுமையை அனுபவிக்கும் மக்களுக்கு பொருட்களை வழங்குவதன் மூலம் அவர்களுக்கு மகிழ்ச்சியைத் தரும் என்ற உயரிய நோக்குடன் ஒரு இந்து துறவி ரேடியோ வேரித்தாஸ் பணியில் இடம்பெற்றுள்ளது நமது பணிக்கு கிடைத்த சிறப்பு ஆகும் அந்த துறவி ராமகிருஷ்ணா இயக்கத்தின் உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.
ரேடியோ வேரித்தாஸ் ஆங்கிலம் மற்றும் 21 ஆசிய மொழிகளில் பெங்காலி, சின் ஃபலாம், சின் ஹக்கா, சின் டெடிம், ஹிந்தி, ஹ்மாங், கச்சின் ஜிங்பாவ், கச்சின் லிசு, கச்சின் ரவாங், கரேன் ஸ்காவ், கரேன் ப்வோ, கே'சோ, கெமர், மாண்டரின், மியான்மர் ,சிங்களம், தமிழ், தெலுங்கு, உருது, வியட்நாம் மற்றும் சோ உள்ளிட்ட மொழிகளில் சேவைகளை வழங்கி வருகிறது.
பல்வேறு மதங்கள் மற்றும் கலாச்சாரங்களைச் சேர்ந்த ஏழைகளுடன் உரையாடுவதன் மூலம் ஆசியா மற்றும் அதற்கு அப்பால் உள்ள அனைத்து மக்களுக்கும் நற்செய்தியைப் பரப்புவதற்கான அதன் முதன்மை இலக்கில் ரேடியோ வேரித்தாஸ் உண்மையின் போர்வாளாக இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.இந்த வேளையில் ரேடியோ வேரித்தாஸ் தனது பணியை இன்னும் சிறப்பாக ஆற்ற வேண்டும் என்று தொடர்ந்து செயலாற்றி வருகிறது.
_ அருள்பணி வி .ஜான்சன் SdC
(Translated from RVA English News)
Add new comment