Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
தொலைந்துவிட்டாயா , குழப்பமா , மறந்துவிட்டாயா இயேசு உன்னோடு இருக்கிறார் | வேரித்தாஸ் செய்திகள்
குருத்தோலை ஞாயிறு அன்று, திருத்தந்தை பிரான்சிஸ், இயேசு தம்முடைய பேரார்வம் மற்றும் சிலுவையில் அறையப்பட்டதன் வலியையும் தானாக முன்வந்து ஏற்றுக்கொண்டார், இதனால் நாம் அனுபவிக்கும் எந்த துக்கத்திலும் அல்லது சிரமத்திலும் அவர் நம்முடன் இருக்கிறார்.
இயேசு நம்மை விரக்திக்கு இரையாக்கி விடக்கூடாது என்பதற்காக அவர் கைவிடப்பட்டதை ஏற்றுக்கொண்டு, என்றென்றும் நம் பக்கத்தில் இருப்பதற்காக, தன்னையே கையளித்தார் என்று ஏப்ரல் 2 ஆம் தேதி புனித பேதுரு சதுக்கத்தில் குருத்தோலை ஞாயிறு ஆராதனையின் போது திருத்தந்தை கூறினார்.
திருத்தந்தை பிரான்சிஸ் ரோம் நகரின் ஜெமெல்லி மருத்துவமனையில் இருந்து சிகிச்சை முடிந்து திரும்பிய பிறகு குருத்தோலை ஞாயிறு திருப்பலிக்கு தலைமை தாங்கினார் .
திருத்தந்தை மூச்சுக்குழாய் அழற்சி நோய்த்தொற்றுக்கான சிகிச்சைக்காக மார்ச் 29 முதல் மூன்று நாட்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்று வத்திக்கான் தெரிவித்துள்ளது.
சுமார் 60,000 பேர் திருத்தந்தியின் ஆராதனையில் இருந்ததாக வத்திக்கான் தெரிவித்துள்ளது.
திருத்தந்தை பிரான்சிஸ் தனது மறைஉரையில் மென்மையான குரலில் பேசுகையில், நாம் எந்த விதமான கைவிடப்பட்ட சூழ்நிலையில் இருந்தாலும், இயேசு நம் பக்கம் இருக்கிறார் என்பதை வலியுறுத்தினார்.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் புனித பேதுரு சதுக்கத்தின் கொலோனேட்டின் கீழ் கண்டெடுக்கப்பட்ட ஜெர்மனியைச் சேர்ந்த வீடற்ற ஒருவரின் மரணத்தை நினைவுகூர்ந்து, கைவிடப்பட்டவர்களில் இயேசுவைக் காண்போம் என்றும் கூறினார்.
இயேசு “தன் உருவத்தில் பிரதிபலிக்கும் நம் சகோதர சகோதரிகளை, மிகுந்த துன்பத்தையும் தனிமையையும் அனுபவிக்கும் நம் சகோதர சகோதரிகளை நாம் கவனித்துக்கொள்ள வேண்டும் என்று விரும்புகிறார். சகோதர சகோதரிகளே, இன்று நம்மிடையே சுரண்டப்படும் மற்றும் கைவிடப்பட்ட மக்களும் உள்ளனர்; ஏழைகள் உங்களோடு உங்கள் தெருக்களில் வாழ்கிறார்கள், நீங்கள் அவர்களை பார்த்தால் அவர்களை பார்த்தும் பார்காததுபோல் வேறு வழியைப் பார்த்து செல்கிறீர்கள் , அவர்களிடம் இருந்து முகத்தை திருப்பி கொள்கிறீர்கள், புலம்பெயர்ந்தவர்கள் இப்போது மனிதர்களாக கணக்கிடப்படுவது இல்லை மாறாக அவர்கள் கணக்கிற்க்காக சரிபார்க்கப்டும் எண்கள்; இன்றைய சூழ்நிலையில் மக்கள் ஒரு பிரச்சனைகளாக கருதப்பட்டு எழுதப்பட்டுள்ளனர்.
இந்த உலகத்தை காண முடியாத குழந்தைகள், தனிமைப்படுத்தப்பட்ட முதியவர்கள், மறக்கப்பட்ட நோயாளிகள், கைவிடப்பட்ட மாற்றுத்திறனாளிகள் மற்றும் தனிமையில் இருக்கும் இளைஞர்கள் போன்ற "கைவிடப்பட்ட, கண்ணுக்குத் தெரியாத, மக்களை இறைவன் மிக அதிகமாக அன்பு செய்கிறார் " என்று திருத்தந்தை பிரான்சிஸ் கூறினார்.
இயேசு, கைவிடப்பட்ட நிலையில் இருக்கும் அனைவருக்காகவும் கைவிடப்பட்டதாகக் காணும் அனைவருக்கும் நம் கண்களையும் இதயங்களையும் திறக்கும்படி கேட்கிறார்.
திருத்தந்தை பிரான்சிஸ் ஏப்ரல் 2 ஆம் தேதி திருத்தந்தைக்கு உரிய சிறிய பேட்டரி காரில் புனித பேதுரு சதுக்கத்தில் நுழைந்தார். அவர் குருத்தோலைகளை ஆசீர்வதிப்பதற்காகவும், புனித மத்தேயுவின் நற்செய்தி மற்றும் 23 ஆம் திருப்பாடலை பாடுவதற்காகவும் அவர் மத்திய தூபிக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
ஏப்ரல் 2, 2023 அன்று புனித பேதுரு சதுக்கத்தில் குருத்தோலை ஞாயிறு திருப்பலிக்கு திருத்தந்தை பிரான்சிஸ் தலைமை தாங்கினார்.
கர்தினால்கள், ஆயர்கள் , குருக்கள் , திருத்தொண்டர்கள் மற்றும் பொது மக்கள் பனை ஓலைகள், ஒலிவ இலைகள் மற்றும் "பர்முரேலி" என்று அழைக்கப்படும் பெரிய நெசவு செய்யப்பட்ட பனைகளை ஏந்திக்கொண்டு இயேசு ஜெருசலேமுக்குள் நுழைந்ததை நினைவுகூரும் பவனியை தொடர்ந்து இறைமக்களுக்கு திருத்தந்தையின் ஆசீர்வாதம் வழங்கப்பட்டது. திருத்தந்தை பிரான்சிஸ் 2019 ஆம் ஆண்டு முதல் கோரோனோ தொற்றின் காரணமாக இந்த குருத்தோலை பவனியை வழிநடத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
_ அருள்பணி வி. ஜான்சன் SdC
(Source from catholic News Agency )
Add new comment