Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
காற்று மாசுபாட்டை எதிர்த்துப் போராடும் இந்தியாவைச் சேர்ந்த மரங்கள், பயிர்கள் || Veritas Tamil
அரசமரம் , மாமரம் , வேம்பு, மக்காச்சோளம், குங்குமப்பூ & பட்டாணி ஆகியவை காற்று மாசுபாடு அதிகமாக உள்ள பகுதிகளுக்கு மிகவும் ஏற்றதாகக் காணப்படுகின்றன.
ஒரு புதிய ஆய்வின்படி, இந்தியாவில் மட்டுமே காணப்படும் சில மரங்கள் மற்றும் பயிர்கள் காற்று மாசுபாட்டை உறிஞ்சி வடிகட்டுவதன் மூலம் காற்று மாசுபாட்டின் தாக்கத்தை குறைக்க உதவுகிறது என்கிறது சமீபத்திய தரவுகள்.
அரசமரம் , வேம்பு, மா போன்ற மரங்களும் சோளம், பட்டாணி மற்றும் குங்குமப்பூ போன்ற பயிர்களும் அதிக அளவு காற்று மாசு உள்ள பகுதிகளுக்கு மிகவும் பொருத்தமானவை என்று ஏப்ரல் 25, 2023 இல் வெளியிடப்பட்ட ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பீகார் மாநிலம் பாட்னாவில் நடத்தப்பட்ட ஆய்வின் போது இந்த மரங்கள் அதிக காற்று மாசுபாடு சகிப்புத்தன்மை குறியீட்டின் (APTI) மதிப்புகளை வெளிப்படுத்தின. APTI மற்றும் எதிர்பார்க்கப்படும் செயல்திறன் குறியீடு ஆகியவை காற்று மாசுபாட்டிற்கு எதிராக மரம் மற்றும் பயிர் இனங்களின் சகிப்புத்தன்மையை மதிப்பிடுவதற்கு பயன்படுத்தப்படும் கருவிகள் ஆகும்.
இந்திய வேளாண் ஆராய்ச்சி துறையின் ஆராய்ச்சியாளர்கள், இந்தியாவின் கிழக்குப் பகுதியில் அதிகம் காணப்படும் பயிர்கள் மற்றும் மரங்களை ஆய்வு செய்தனர். உயிர்வேதியியல் அளவுருக்களில் காற்று மாசுபாட்டின் தாக்கத்தை மதிப்பிடுவதற்கு பாட்னாவில் உள்ள ஐந்து வெவ்வேறு இடங்களில் இருந்து 19 மரம் மற்றும் பயிர் வகைகளை ஆய்வு செய்தனர்.
வெவ்வேறு மரங்களும் பயிர் இனங்களும் காற்று மாசுபாட்டிற்கு வித்தியாசமாக எதிர்வினைகளை வெளிப்படுத்தின தாவரங்களில் உள்ள அஸ்கார்பிக் அமிலத்தின் அளவு ஆக்ஸிஜனேற்ற மாசுபாட்டின் எதிர்மறையான விளைவுகளுக்கு எதிராக அவற்றின் சகிப்புத்தன்மையை தீர்மானிக்கிறது. நமது நாட்டின் அரசமரத்தில் அஸ்கார்பிக் அமில அளவு அதிகமாக இருந்தது, அதைத் தொடர்ந்து மா மரங்கள்,தானியங்களில், மக்காச்சோளத்தில் அஸ்கார்பிக் அமிலத்தின் அளவு அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டது. எண்ணெய் வித்துக்களில், குங்குமப்பூ மற்றும் ஆளி விதைகளில் அஸ்கார்பிக் அமிலம் ஒத்த அளவு இருந்தது. பருப்பு வகைகளில், பட்டாணியில் அதிக அஸ்கார்பிக் அமிலம் உள்ளது, அதைத் தொடர்ந்து இந்திய பட்டாணி உள்ளது.
இந்தோ-கங்கை பெல்ட்டில் உள்ள பாட்னா நகரம் இந்தியாவின் மிகவும் மாசுபட்ட நகரங்களில் ஒன்றாகும். காற்று மாசுபாட்டைக் குறைப்பதிலும், அதைச் சரிசெய்வதிலும் அதிக கவனம் செலுத்த வேண்டிய அவசியம் உள்ளது. இதற்கு சிறந்த தீர்வுகளில் ஒன்று நகர்ப்புற காடுகள் மற்றும் விவசாயம் என்று ஆராய்ச்சியாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
தற்போதைய இந்திய சூழ்நிலையில், அதிகரித்து வரும் காற்று மாசுபாடு ஒரு தீவிரமான கவலையாக உள்ளது, காற்று மாசுபாட்டிற்கு குறைவாக பாதிக்கப்படக்கூடிய மரங்கள் மற்றும் பயிர்களை உணர்வுபூர்வமாக தேர்ந்தெடுப்பது சூழல் நட்பு மேலாண்மை உத்தியாக இருக்கும். இத்தகைய இனங்கள் வளிமண்டலத்தில் இருந்து மாசுபாட்டைக் குறைக்கவும் அகற்றவும் உதவுகின்றன என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
நாட்டில் உள்ள பெரும்பாலான நகரங்கள் 2021 ஆம் ஆண்டில் வருடாந்திர மாசு துகள்கள் (PM) 2.5 அளவில் உயரும் என்ற போக்கைப் பதிவு செய்துள்ளன.
பீகார் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்தும் திட்டமானது, பாட்னா மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பசுமை மண்டலத்தை உருவாக்கவும், காற்றை சுத்தமாகவும் ஆரோக்கியமாகவும் மாற்ற வேம்பு, சீஷம், அரசமரம் , கருவமரம் மற்றும் குல்மோஹர் போன்ற மரங்களை நடவு செய்ய பரிந்துரைத்தது.
COVID-19 தொற்றுநோயால் ஏற்பட்ட இடையூறு காரணமாக மேற்கு வங்கம், பீகார் மற்றும் ஒடிசாவில் காற்று மாசுபாடு ஒரு சிறிய சரிவுக்குப் பிறகு மீண்டும் அதிகரித்து வருகிறது, டெல்லியை தளமாகக் கொண்ட இலாப நோக்கற்ற அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையத்தின் பகுப்பாய்வு இந்த ஆய்வினை மேற்கொண்டுள்ளது.
_ அருள்பணி வி.ஜான்சன் SdC
(Source from Down to Earth)
Add new comment