புனித அர்ப்பண வாழ்க்கையிலிருந்து நீக்கம் செய்யப்பட்டால் மேல்முறையீடு செய்ய கால அவகாசத்தை நீட்டித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ் | வேரித்தாஸ் செய்திகள்


அர்ப்பணிக்கப்பட்ட வாழ்க்கை வாழும் சபைகளின் உறுப்பினர்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டால் அதனை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அதிக கால அவகாசம் அளிக்கும் வகையில், திருத்தந்தை பிரான்சிஸ் திங்களன்று திருஅவை சட்ட தொகுப்பில்  திருத்தம் செய்துள்ளார்.

ஏப்ரல் 3 அன்று motu proprio  திருத்தந்தையின் மாமன்ற ஆட்சிக்குரிய திருத்தந்தையின் திருக்கட்டளை லத்தீன் திருஅவை மற்றும் கிழக்கு திருஅவைகளின்  சட்டத்தில் விதிமுறைகளை மாற்றியமைத்துள்ளது.

அர்ப்பண வாழ்வில் இருந்து நீக்கப்படுவதற்கு மேல்முறையீடு செய்வதற்கு தற்போதைய காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளது என்பது ஒரு தனி நபரின் உரிமைகளைப் பாதுகாப்பதுடன் ஒத்துப்போகிறது என்று கூற முடியாது" என்று திருத்தந்தை  கூறினார்.

மேல்முறையீட்டிற்கான குறைவான காலக்கெடு சம்பந்தப்பட்ட நபருக்கு எதிரான குற்றச்சாட்டுகளை சிறப்பாக மதிப்பீடு செய்வதற்கும், மேலும் பொருத்தமான தகவல்தொடர்பு முறைகளைப் பயன்படுத்துவதற்கும்  இது அனுமதி அளிக்கும்," என்று அவர் மேலும் கூறினார்.

தற்போது  தகுதி  நீக்கம் குறித்த அறிவிப்பைப் பெற்ற நாளிலிருந்து மேல்முறையீடு செய்ய ஒரு நபருக்கு 30 நாட்கள் அவகாசம் அளிக்கும் வகையில் , திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்,  திருஅவை சட்ட தொகுப்பில் 700-ஐ மாற்றியுள்ளார். . இதற்கு முன்பு 10 நாட்கள் மட்டுமே அவகாசம் வழங்கப்பட்டது என்பது கவனத்தில் கொள்ள வேண்டியது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஆணையை ரத்து செய்யவோ அல்லது திருத்தவோ எழுத்துப்பூர்வமாக கோர வேண்டிய அவசியமில்லை என்று திருத்தந்தையின் மாமன்ற ஆட்சிக்குரிய திருத்தந்தையின் திருக்கட்டளை motu proprio கூறுகிறது 

கிழக்கு திருஅவைகளின் சட்ட  குறியீட்டில் உள்ள சமமான சட்டம், எண் 500 பத்தி 2, முதலில் இருந்த 15 நாட்களில் இருந்து 30 ஆக மாற்றப்பட்டுள்ளது.

இந்த திருத்தங்கள் அனைத்தும் மே 7 முதல் அமலுக்கு வருகின்றன.

இது ஆறாவது பொதுக் கொள்கையாகும், அக்டோபர் 1967 இல், ஆயர் பேரவை, திருஅவை  சட்டத்தின் திருத்தத்திற்கு ஒப்புதல் அளித்தது, இது இன்றும் செல்லுபடியாகும்" என்று திருத்தந்தை கூறினார்.

திருஅவையின்  சட்ட அமைப்பில் தனிச்சலுகை பெற்ற இடமான அகநிலை உரிமைகளைப்  பாதுகாப்பதிலும்" இந்தக் கொள்கை அங்கீகரிக்கிறது என்று அவர் மேலும் கூறினார்.

ஒரு நபரின் உரிமைகளைப் பாதுகாப்பது குறிப்பாக "திருஅவையின் வாழ்க்கையின் மிக நுட்பமான நிகழ்வுகளில்" மிகவும் பொருத்தமானதாகிறது, அதாவது ஒரு நபரின்  அர்ப்பணிக்கப்பட்டவர் என்ற மேன்மை நிலையை பாதுகாப்பது என்பது அந்த சபை மற்றும் உறுப்பினர்களின் கடமை ஆகும்.

_ அருள்பணி வி. ஜான்சன் SdC

(Source from Catholic News Agency)

Add new comment

1 + 1 =