Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
உலக உணவு தினம் | அக்டோபர் 16 | Veritas Tamil
உணவு உடை இருப்பிடம் இவை மூன்றும் மனிதனின் அடிப்படை உரிமைகள், உணவு இல்லாமல் மனிதலில்லை ஏனென்றால் நம் வாழ்வதற்கு உணவு அடிப்படை தேவையாக கருதப்படுகிறது, இன்ரளவும் ஒன்பது பேரில் ஒருவர் உலகளவில் நாள்பட்ட பசியை அனுபவிக்கின்றனர். உணவு ஒரு சலுகை அல்ல அது நம் பிறப்பிப்புரிமை என்று ஐக்கிய நாடுகள் சபை அங்கீகரித்துள்ளது, இதை நினைவு கூற அக்டோபர் 16, 1979 முதல் ஆண்டுதோறும் உலக உணவு தினம் கடைப்பிடிக்கபடுகிறது.
இன்றும் 7 பேரில் 1 அமெரிக்கா ஐக்கிய நாடுகளில் உணவு வங்கிகளை தங்கள் கூடுதல் அல்லது முதன்மை ஆதாரமாக நம்பிருக்கிறார்கள், இவர்கள் பெரும்பாலும் வேலையில்லாமல் தவிக்கும் கும்பங்கள், ஆரோக்கியமான உணவு பண்டங்களை கொணர முடியாத குடும்பங்கள் ஆற்றும் தனிநபர்கள்.
ஏன் உலக உணவு தினம் முக்கியமானது?
பசியை போக்க பணம் திரட்டுங்கள், இன்றே, பசியை ஒழிப்பதில் எங்களுடன் சேருங்கள் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்த இந்நாள் சிறப்பாக உதவுகிறது. கோடிக்கணக்கான மக்கள் ஊட்டச்சத்து குறைபாட்டின் காரணியமாக பல ஆரோக்கிய மற்றும் உடல் நல கேடுகளை அனுபவிக்கின்றனர், இது வளர்ந்து வரும் உடலையும் மூளையையும் சேதப்படுத்துகிறது. அதனால் இதன் மீது கவனம் ஈர்ப்பது முக்கியமாகவும் அத்தியாவசியமாகவும் கருதப்படுகிறது - மேலும் அவ்வாறு செய்வதன் மூலம், பூமி பந்திலுள்ள அனைவருக்கும் உணவுப் பாதுகாப்பையும் சத்தான உணவுகள் கிடைப்பதையும் உறுதி செய்யகிறது இந்நன்நாள். மேலும் இந்த தினம் பசியை முடிவுக்கு கொண்டு வர முடியும் என்ற ஒரு நினைவூட்டலை மக்களின் மனதில் விதைக்கிறது. இது தற்போது பூமியில் உள்ள ஒவ்வொரு நபருக்கும் போதுமான உணவை உற்பத்தி செய்ய வழிசெய்கிறது, இருப்பினும், ஆண்டுதோறும் 1.3 பில்லியன் டன் உணவு வீணடிக்கப்படுகிறது, இது உற்பத்தி செய்யப்படும் உணவில் தோராயமாக 20% ஆகும்.
கோடிக்கணக்கான மக்களின் வாழ்வாதாரத்தை வழங்குவதற்கும் உணவு வீணாவதைக் குறைப்பதற்கும் உலக உணவு தினம் ஓர் உந்துசக்தியாக செயல்படுகிறது. உணவு; இன்பம் மற்றும் பொழுதுபோக்கிற்கான ஒரு சிறந்த ஆதாரம்.
வள்ளுவன் " தீயள வன்றித் தெரியான் பெரிதுண்ணின் நோயள வின்றிப் படும்" , பசியின் அளவு அறியாமலும், ஆராயாமலும் அதிகம் உண்டால் நோய்களும் அளவின்றி வரும் என்ற குறள் மூலம், சில சமயங்களில் நாம் அதிகமாக உட்கொள்ளலாம், கவனத்துடன் சாப்பிடுவதில் கவனம் செலுத்தினால், வீணாகும் உணவின் அளவையும், பசியுடன் படுக்கைக்குச் செல்வோரின் எண்ணிக்கையையும் குறைக்கலாம். உலக உணவு தினதில் அளவுக்கு அதிகமாக உண்பதைத் தவிர்த்து, பசியினால் வாடுவோரின் பசியை போக்க முயற்சி செய்வோம். " ஏழைகள் உணவையும், செல்வர்கள் பசியையும் தேடுகிறார்கள்" என்பதை நினைவில் கொள்வோம்.
Add new comment