உலக மறைபரப்பு ஞாயிறு அன்று உக்ரைனுக்காக செபம் செய்ய அழைப்பு விடுத்த திருத்தந்தை | வேரித்தாஸ் செய்திகள்


ஞாயிற்றுக்கிழமை மூவேளை செபம் முடிந்து பேசிய , திருத்தந்தை பிரான்சிஸ், அக்டோபர் 25 ஆம் தேதி செவ்வாய்க் கிழமை உக்ரைன் மற்றும் உலக அமைதிக்காக, திருஅவையின் பிரதிநிதிகள் மற்றும் உலக மதங்களின் பிரதிநிதிகளுடன் செபம்  செய்ய ரோம் நகரில் உள்ள கொலோசியத்திற்குச் செல்வதாகக் கூறினார். இந்த நாட்களில் நடைபெறும் அமைதிக்கான அழுகுரல் என்ற தலைப்பில் நடைபெறும் கூட்டத்தில் அனைத்து பிரதிநிதிகளுடன் இணைந்து பிரார்த்தனை நடைபெறும்.

அங்கு கூடி இருந்த மக்களிடம் பேசிய திருத்தந்தை கடவுளிடம்  இந்த பெரிய வேண்டுகோளினை வைத்து  இறைவனின் பிள்ளைகளாக செபிக்க  நான் உங்களை அழைக்கிறேன்: செபம்  அமைதியின் பலம். போரினால் தொடர்ந்து இன்னலுக்கு உள்ளாகிக்கொண்டு இருக்கும்  உக்ரைனுக்காக செபம்  செய்வோம், தொடர்ந்து செபம் செய்வோம்.

நீங்கள் எனக்கு சாட்சிகளாக இருங்கள் என்ற இறைவாக்கோடு அக்டோபர் 23ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை உலக மறைபரப்பு  தினத்தை இந்த ஆண்டின் கருப்பொருளுடன் திருத்தந்தை தொடங்கி வைத்தார். மேலும் இந்த நாள் "சாட்சி மற்றும் நற்செய்தி அறிவிப்பின் மூலம் திருஅவையின் உலகளாவிய பணியில் பங்கேற்கும் விருப்பத்தை அனைத்து திருமுழுக்கு  பெற்றவர்களிடமும் மீண்டும் எழுப்ப ஒரு முக்கியமான வாய்ப்பைக் குறிக்கிறது."

செபம்  மற்றும் உறுதியான ஒற்றுமையுடன் மறைபரப்பு நற்செய்தியாளர்களை  ஆதரிக்க நான் அனைவரையும் ஊக்குவிக்கிறேன், இதனால் அவர்கள் உலகம் முழுவதும் நற்செய்தி மற்றும் மனித மேம்பாட்டிற்கான பணிகளைத் தொடரலாம். என்று கூறினார்.

2022 உலக மறைபரப்பு தினத்திற்கான தனது செய்தியில், முழுமையான நற்செய்திபணிகள் மற்றும் கிறிஸ்தவ சமூகங்கள் மத்தியில் மறைபரப்பு நடவடிக்கையின் புதிய வரலாற்றினை நான் தொடர்ந்து கனவு காண்கிறேன்" என்று திருத்தந்தை கூறினார்.

இறுதியாக, 1936 இல் ஸ்பெயினில் இறைநம்பிக்கையின்  வெறுப்பால் கொல்லப்பட்ட Vicente Nicasio Renuncio Toribio மற்றும் தூய பரிசுத்த மீட்பர் (Redemptorists) சபையின் பதினொரு தோழர்கள் மாட்ரிட்டில் நேற்று புனிதர் பட்டம் பெற்றதையும் திருத்தந்தை நினைவு கூர்ந்தார். கிறிஸ்துவின் இந்த சாட்சிகளின் உதாரணம், தங்கள் இரத்தத்தை சிந்தி சாட்சிகளாக மாறியது , நம்மை சீராகவும் தைரியமாகவும் இருக்க தூண்டுகிறது; உலகில் நற்செய்தியை விதைக்க இன்று பாடுபடுபவர்களை நாம் நினைவு கூற வேண்டு .கிறிஸ்துவுக்கு தைரியமான சாட்சிகளாக இருங்கள் என்று கூறி அங்கு சதுக்கத்தில் இருந்த அனைவர்க்கும் திருத்தந்தை தனது ஆசிர்வாதத்தை வழங்கினார்.

 

-அருள்பணி. வி .ஜான்சன் 

 

 

Add new comment

8 + 8 =