கீழச்சேரி திரு இருதய ஆலயத்தின் பங்கு மக்கள் சார்பாக சிறப்பு மருத்துவ முகாம் | வேரித்தாஸ் செய்திகள்


images courtesy: facebook

சென்னை -மயிலை உயர்மறைமாவட்டம், கீழச்சேரி திரு இருதய ஆலயத்தின் பங்கு மக்கள் சார்பாக சிறப்பு மருத்துவ முகாம் பனிமலர் மருத்துவ கல்லூரியின் உதவியுடன் நடத்தப்பட்டது.அக்டோபர் மாதம் 16 ஆம் தேதி அன்று திருவள்ளூர் மாவட்டம் கீழச்சேரியில் உள்ள திரு இருதய ஆண்டவர் பங்கு தந்தை கிறிஸ்டோபர் தலைமையில் பங்கு ஆலய மக்கள் மற்றும் பனிமலர் மருத்துவ கல்லூரி உதவியுடன் சிறப்பு இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.

ஞாயிறு திருப்பலி முடிந்த பிறகு பங்குமக்கள் மற்றும் மருத்துவர்களின் உதவியுடன் மருத்துவ முகாம் தொடங்கியது. பங்குத்தந்தை கிறிஸ்டோபர் அவர்கள் ஜெபம் செய்து இந்த முகாம் சிறப்புற நடைபெற இறைவனின் ஆசீர் பெற்று தந்தார். அதன்பிறகு அருட்தந்தை ,மருத்துவர் சார்பாக மருத்துவர் ஒருவரும் , பங்கு மக்களில் சார்பாக  ஒருவரும், பங்கு இளைஞர்கள் சார்பாக ஒருவரும், மறைக்கல்வி குழந்தைகள் சார்பாக சிறுமி ஒருவரும் குத்துவிளக்கு ஏற்றி மருத்துவ முகாமினை தொடங்கி வைத்தனர்.

இந்த மருத்துவ முகாமில் பலவிதமான நோய்களுக்கு சிகிச்சையும் ஆலோசேனையும் சிகிச்சையும் அளிக்கப்பட்டது. குறிப்பாக சர்க்கரை நோய், உயர் இரத்த அழுத்த நோய், ஆஸ்துமா, இருதய நோய் தொடர்பான நோய்களுக்கு ஆலோசனையும் மருந்துகளும் வழங்கப்பட்டன. இதற்கு தேவையான அணைத்து ஏற்பாடுகளையும் பங்கு தந்தையுடன் இணைந்து பனிமலர் மருத்துவ கல்லூரி மற்றும் கீழச்சேரி பங்கு மக்கள் சிறப்பாக செய்து இருந்தனர்.

 

அருள்பணி வி.ஜான்சன்

Add new comment

9 + 6 =