குழந்தைகள் பராபமரிப்பு மைய தாக்குதல்: ஒரு தந்தையின் நெருக்கத்தை வெளிப்படுத்திய திருத்தந்தை | வேரித்தாஸ் செய்திகள்


தாய்லாந்தில் உள்ள பாங்காக்கின் வடகிழக்கில் அமைந்துள்ள உதாய் சவானில் உள்ள குழந்தைகள் பராமரிப்பு மையத்தில் நடந்த கொடூரமான தாக்குதலுக்கு திருத்தந்தை பிரான்சிஸ் ஆழ்ந்த இரங்கலையும் இறைவனின் நெருக்கத்தையும் வெளிப்படுத்தியுள்ளார்.

இந்த கொடூர செயலில் ஈடுபட்டவர் ஒரு முன்னாள் காவல்துறை அதிகாரி. திடீரென்று குழந்தைகள் பராபரிப்பு மையத்தினுள் நுழைந்து தாக்குதலில் ஈடுபட்டார். அதில் 30க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்தனர்.

சமீபகால வரலாற்றில் ஒரு கொலையாளியால் நடத்தப்பட்ட படுகொலைகளில் இது மிகவும் மோசமான நிகழ்வு என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த கொடூரமான தாக்குதலை அறிந்து மிகவும் வருத்தமடைந்த திருத்தந்தை பிரான்சிஸ்  வெளியுறவுத்துறை செயலாளர் கர்தினால் பீட்ரோ பரோலின் திருத்தந்தையின் கையொப்பமிட்ட ஒரு செய்தியை அனுப்பினார். அதில் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தனது இதயப்பூர்வமான இரங்கலைத் தெரிவித்தார்.  

உதை சவானில் உள்ள குழந்தைகள் பராமரிப்பு மையத்தில் நடந்த கொடூரமான தாக்குதலை அறிந்து மிகவும் வருத்தமடைந்த திருத்தந்தை பிரான்சிஸ்,அப்பாவி குழந்தைகளுக்கு எதிரான இந்த சொல்லொணா வன்முறைச் செயலால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் தனது இதயப்பூர்வமான இரங்கலையும், இறைவனின் நெருக்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். மேலும் ஒரு தந்தையின் இதயம் மிகவும் நொறுங்கி உடைந்துள்ளது போன்ற வலியை உணர்வதாக திருத்தந்தை  மிகுந்த வேதனையுடன் வெளிப்படுத்தியுள்ளார்.

மிகுந்த சோகமான இந்த நேரத்தில்,காயமடைந்தவர்களும் உயிரிழந்த  குழந்தைகளின் குடும்பங்களுக்கும்,தெய்வீக குணப்படுத்துதலையும் ஆறுதலையும் உறவினர்கள் நண்பர்கள்  மற்றும் சக குடிமக்களின் ஒற்றுமையிலிருந்து ஆதரவையும்,அன்பையும் பெற முடியும் என்று  திருத்தந்தை பிரான்சிஸ் பிரார்த்தனை செய்தார்.

உலக மக்கள் அனைவருக்கும் ஒவ்வொரு செயலிலும் அமைதி நிலவ வேண்டும் என்று திருத்தந்தை அழைப்பு விடுத்துள்ளார்.

Add new comment

9 + 3 =