பாகிஸ்தானிலுள்ள சிறுபான்மை மதங்களுக்கு புதிய அத்தியாயம்


பாகிஸ்தானிலுள்ள சிறுபான்மை மதங்களை சேர்ந்த மக்களை பின்தொடாந்து மனித உரிமைகளை அங்கீகரித்திருப்பதற்கு இஸ்லாமாபாத்திலுள்ள அல்லாமா இக்பால் திறந்தவெளி பல்கலைக்கழத்தை கத்தேலிக்க கல்வியாளர் புகழ்ந்து வருகின்றனர்.

 

இந்த பல்கலைக்கழகத்தில் இருக்கும் ஓர் அத்தியாயம் “இஸ்லாம் மற்றும் பிற மதங்களிலுள்ள மனித உரிமைகள்” என்ற தலைப்பாகும்.

 

இதன் மூலம் கிறிஸ்தவம், இந்து மதம், சீக்கிய மதம் மற்றும் சௌராஸ்டிர மாதம் ஆகியவற்றின் மனித உரிமை கருத்துக்கள் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவ மாணவியருக்கு பாடமாக வழங்கப்பட்டுள்ளது

 

சமீபத்திய பதிப்பு விவிலிய போதனைகளுக்கு எட்டு பக்கங்களை ஒதுக்கியுள்ளது.

 

இதுவரை இஸ்லாம் தவிர வேறு எந்த மதங்களின் கருத்துக்களும் கல்வி கொள்கையின் பகுதியாக இருந்ததில்லை. ஆனால், முதல் முறையாக வேறுபட்ட புனித நூல்களின் மேற்கோள்களை மாணவ மாணவியர் கற்றுக்கொள்ளும் நிலைமை தோன்றியுள்ளது.

 

இது பெரும்பான்மையோரின் மதம் அடிப்படை உரிமைகளை கொண்டிருப்பதாக எண்ணுகின்ற பொது அபிப்பிராயம் நீக்கும் என்று கத்தோலிக்க பேராசிரியர் அன்ஜூம் ஜேம்ஸ் பால் தெரிவித்திருக்கிறார்.

 

இந்த புத்தகங்களில் எந்த மதத்தை பற்றியும் ஒப்பிடும் பகுதி இல்லை என்பது குறிப்பித்தக்கது.   

Add new comment

6 + 7 =