கர்மா சடங்குகளால் ஆதாயம் அடைந்த வியட்நாம் பௌத்த துறவிக்கு இடைநீக்கம்


தீய கர்மாவை நீக்கி விடுவதாக பணம் சம்பாதிக்கும் சடங்குகளை உருவாக்கி வளர்த்த பிரபல பௌத்த துறவி, வியட்நாம் மத்திய பௌத்த அமைப்பிலிருந்து இடைநீக்கத்தை எதிர்கொண்டுள்ளார்.

 

இந்த சர்ச்சைக்குரிய சட்டங்ககள் தொடர்பாக, சியாங் நின்க் மாகாணத்தின் உலொங் பி நகரத்திலுள்ள பா வாங் பகோடாவின் பௌத்த மத தலைவரான வணக்கத்திற்குரிய திச் ட்ருக் தாய் மின்க அரச அங்கீகாரம் உடைய பௌத்த சங்காவில் இருந்து இடைநீக்கத்தை எதிர்கொண்டு வருகிறார்.

 

52 வயதான வணக்கத்திற்குரிய மின்க் சங்காவின் விதிமுறைகளை மீறியதாகவும், இந்த நிறுவனத்தின் மற்றும் துறவிகள் அனைவரின் நற்பெயரை கெடுத்து விட்டதாகவும்  இந்த சங்காவின் துணை செயலதிகாரியான மிகவும் வணக்கத்திற்குரிய திச் பியா சியாங் கூறியுள்ளார்.

 

வழிபாடு செய்வோரின் ஆன்மாவுக்கு கட்டளை இட்டும், தீய கர்மாவை அகற்ற சடங்குகள் நிறைவேற்றியதோடு, இந்த சடங்குகளுக்கு மக்களிடம் இருந்து பணம் பெற்றுள்ளார் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

இது பௌத்த பாரம்பரிய சடங்குகளுக்கு ஒத்த விடயமல்ல என்று ஹனோயில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Add new comment

5 + 4 =