பிலிப்பீன்ஸ் தேர்தல் வேட்பாளர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் திருச்சபை குழுக்கள்


கத்தோலிக்க மற்றும் சீர்திருத்த சபையை சேர்ந்த நிறுவனங்கள் பிலிப்பீன்ஸ் தேர்தலில் போட்டியிடும் 10 செனட் அவை வேட்பாளர்களுக்கு ஆதரவை தெரிவித்துள்ளன.

 

அதில் எட்டு பேர் ஆளும் பிலிப்பீன்ஸ் அதிபர் ரொட்ரிகோ டுடெர்டேக்கு எதிரானவர்கள்.

 

கத்தோலிக்க ஆயர்கள் ஈடுபடுவதற்கு சொல்கின்ற அரசியலில் பங்கேற்கும் கொள்கையை கடைபிடிக்கவே இதனை மேற்கொள்வதாக மக்களின் தெரிவு இயக்கம் என்று அழைக்கப்படும் இந்த கத்தோலிக்க மறறும் கிறிஸ்தவ பொதுநிலை தலைவர்கள் கூறியுள்ளனர்.  

 

பண்பு மற்றும் மரியாதை, செயல்திறன் மற்றும் திறன்கள், பொது சேவை, கடவுள், அரசியல் சாசனம் மற்றும் சட்டத்திற்கு பிரமாணிக்கமாக இரு்த்தல் போன்ற பண்புகளை அடிப்படையாக கொண்டு இந்த தெரிவை எடுத்துக்கூறுவதாக இந்த குழுவினர் கூறியுள்ளனர்.

Add new comment

1 + 2 =