மேல்முறையீட்டை மறுத்த ஹாங்காங் நீதிமன்றம் – கத்தோலிக்க செயற்பாட்டாளருக்கு சிறை


தண்டனைக்கு எதிரான மேல்முறையீட்டை ஹாங்காங் நீதிமன்றம் ஏற்றுக்கொள்ள மறுத்ததை அடுத்து, பிரபல கத்தோலிக்க செயற்பாட்டாளர் ஒருவர் சிறையில் அடைக்கப்பட்டு்ள்ளார்.

 

கிராம மக்களை இடம்பெயர செய்து, சுற்றுச்சூழல் சேதங்களை உருவாக்கிய நிலம் கையகப்படுத்தியதற்கு எதிராக நடைபெற்ற போராட்டங்களின்போது சீர்குலைவை ஏற்படுத்தியதாக இந்த சிறை தண்டனை வழஙகப்பட்டது.

 

ஐந்து ஆண்டுகளுக்கு முன்னால், சட்டப்பேரவை எல்லைக்கு வெளியே நடைபெற்ற போராட்டத்தில் ஹாங்காங் மறைமாவட்ட நீதி மற்றும் அமைதி பணிக்குழுவின் யிப் போ-லாம் பங்கேற்றார்.

 

அவரை சிறையில் அடைதிருப்பது கத்தோலிக்க திருச்சபையின் மற்றும் தொழிலாளர் சங்கத்தின் கோபத்தை சம்பாதித்துள்ளது.

 

இந்த மேல்முறையீடு மறுக்கப்பட்டுள்ளதை வெறுப்பதாக ஹாங்காங் கத்தோலிக்க நிறுவன ஊழியர் கூட்டமைப்பின் தலைவர் அலெக்ஸாண்டர் யு கூறியு்ளளார்.

Add new comment

1 + 13 =