வெனிசுவேலாவுக்கு ராணுவ விமானங்களை அனுப்பிய ரஷ்யா - அமெரிக்கா கண்டிப்பு


வெளிசுவெலாவுக்கு ராணுவ விமானங்களை அனுப்பியுள்ள ரஷ்யாவை அமெரிக்கா கண்டித்துள்ளது.

 

ரஷ்யாவின் ராணுவ விமானங்கள் வெனிசுவேலாவின் தலைநகரம் அருகில் கடந்த சனிக்கிழமை வந்துள்ளன.

 

வெனிசுவேலாவில் தற்போது நிலவும் நெருக்கடியான  சூழ்நிலையில் ரஷ்யாவின் செயல்பாடு பொறுப்பற்றது என்று அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளது.

 

அமெரிக்காவின்  இந்தக் குற்றச்சாட்டுக்கு ரஷ்யா பதிலளிக்க மறுத்துவிட்டது.

 

வெனிசுலாவில் அமெரிக்காவின் ராணுவ தலையீட்டை ரஷ்யா கண்டித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

 

வறுமை, வேலையில்லாத் திண்டாட்டம், விலைவாசி உயர்வு போன்றவற்றாலும், அரசியல் நிலையற்ற தன்மையாலும் வெனிசுவேலா திண்டாடி வருவதால் அதிபர் மதுரோவின் ஆட்சிக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

Add new comment

1 + 0 =