நவாஸ் ஷெரிப்புக்கு ஒன்றரை மாதம் ஜாமீன்


உடல் நலக்குறைவு காரணமாக பாகிஸ்தான் முன்னாள் தலைமையமைச்சர் நவாஸ் ஷெரீப்புக்கு ஒன்றரை மாதம் பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் பிணை அளித்துள்ளது.

பாகிஸ்தானை விட்டு வெளியேற கூடாது என்ற நிபந்தனையுடன் இந்த பிணை  அளிக்கப்பட்டுள்ளதாக ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.

உருக்கு ஆலை வழக்கில் சிறை தண்டனை பெற்று, சிறையில் இருக்கும் பாகிஸ்தான் முன்னாள் தலைமையமைச்சர் நவாஸ் ஷெரீப் கடந்த ஜனவரி மாதம்  இதயக் கோளாறு காரணமாக லாகூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

 

7 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்ற அவர், கடந்த டிசம்பர் 25-ம் தேதி லாகூர் சிறைக்கு மாற்றப்பட்டார்.

 

3 முறை பிரதமராக இருந்த ஷெரீப், ஒருமுறை கூட தனது 5 ஆண்டு பதவிக்காலத்தை நிறைவு செய்யாதது குறிப்பிடத்தக்கது.

Add new comment

17 + 2 =