நாட்டு மக்களுக்கு உரை – நரேந்திர மோடி தேர்தல் விதி மீறினாரா?


இந்திய தலைமையமைச்சர் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரை மூலம் தேர்தல் நடத்தை விதியை மீறியுள்ளாரா என்று தேர்தல் ஆணையம் உயர்மட்ட குழு ஒன்றை அமைத்திருக்கிறது.

 

மக்களவை தேர்தல் ஏப்ரல் 11ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் செயல்பாட்டில் இருக்கையில், நரேந்திர மோடி மக்களுக்கு உரையாற்றியுள்ளார்.

 

விண்வெளியில் இருக்கும் செயற்கைக்கோளை சுட்டு அழிக்கின்ற ஏவுகணை தொழில்நுட்பத்தை இந்தியா வெற்றிகரமாக சோதனை செய்துள்ளதாக இந்திய தலைமையமைச்சர் நரேந்திர மோடி புதன்கிழமை அறிவித்தார்.

 

அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனாவுக்கு அடுத்தபடியாக இந்த தொழில்நுட்பத்தை கொண்டிருக்கும் உலகின் நான்காவது நாடு இந்தியாவாகும்.

 

தாழ்வான உயரத்தில் பறக்கும் செயற்கைக்கோள் ஒன்றை சுட்டு வீழ்த்தியுள்ளதாகவும், இந்தியா விண்வெளி வல்லரசாக உருவெடுத்துள்ளதாகவும் மோதி குறிப்பிட்டார்.

Add new comment

1 + 7 =