தமிழகத்தில் புனித வியாழக்கிழமை தேர்தல், கோரிக்கை நிராகரிப்பு


மத்திய அரசு திட்டமிட்டபடி, ஏப்ரல் மாதம் 18ம் தேதி புனித வியாழக்கிழமை அன்று மக்களவை தேர்தலும், சட்டமன்ற இடைத்தேர்தலும் தமிழ் நாட்டில் நடைபெறவுள்ளன.

 

புனித வியாழக்கிழமை தேர்தலை வேறு தேதியில் வைக்க வேண்டுமென திருச்சபை அதிகாரிகள் வழங்கிய புகாரை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

 

எனவே, இந்தியாவில் மொத்தம் 13 இந்திய மாநிலங்களில் புனித வியாழக்கிழமை அன்று மக்களவை தேர்தல்கள் நடைபெறுகின்றன.

 

இந்த ஆண்டு கிறிஸ்தவர்கள் புனித வியாழனை அனுசரிக்கும் ஏப்ரல் 18ம் நாளில், 13 மாநிலங்களிலுள்ள 97 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுவதாக மத்திய தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.

 

பிற 12 மாநிலங்களில் உள்ளதைவிட மிகவம் அதிகமாக 44 லட்சம் கிறிஸ்தவர்களை கொண்ட தமிழ்நாடு திருச்சபை அதிகாரிகள் இன்னொரு நாளில் இந்த வாக்குப்பதிவை நடத்த வேண்டுமென நீதிமன்றத்தில் புகார் அளித்திருந்தனர்.

 

இந்த புகாரை தள்ளுபடி செய்துள்ள உயர் நீதிமன்றம், கிறிஸ்தவர்களின் வழிபாடுகளை வாக்குப்பதிவு பாதிக்காமல் நடத்த வேண்டுமென தேர்தல் ஆணையத்திற்கு கட்டளையிட்டுள்ளது.

Add new comment

14 + 4 =