தெற்கு பிலிப்பீன்ஸில் இரண்டு புதிய ஆயர்கள் நியமனம்


பிலிப்பீன்ஸின் தெற்கில் அமைந்துள்ள மிண்டனாவோ பிரதேசத்தில் பணியாற்ற இரண்டு புதிய ஆயர்களை திருத்தந்தை பிரான்சி்ஸ் நிமித்துள்ளார்.

 

புடுயன் மறைமாவட்டத்தை சேர்ந்த அருட்தந்தை கோஸ்மி அல்மிடில்லாவையும், பிரேசிலியன் மகாணத்தில் இசபெல்லா மறைமாவட்ட ஆயராக கிளெரிசிய சபை மறைபரப்பு அருட்தந்தை லியோ டால்மாவையும் திருத்தந்தை ஆயர்களாக நியமித்துள்ளார்,

 

போகோய் மாகாணத்தின் தலிபோன் மறைமாவட்டத்தில் இருந்து வரும் அருட்தந்தை அல்மிடில்லா, 2017ம் ஆண்டு இறந்துபோன ஆயர் ஜூயன் டி டயோஸ் புயேப்லோஸின் இடத்தை நிரப்புகிறார்.

 

கிளரிசியன் சபையின் பொது ஆலோசகர் மற்றும் குருத்துவ பயிற்சியின் பொது தலைவராக அருட்தந்தை டால்மாவ் தற்போது விளங்குகிறார்.

 

49 வயதில் ஆயர்கள் கூட்டத்தில் இணைகின்ற முதல் பிலிப்பீனோ கிளரிசிய மறைபரப்பாளர் இவராவார்.

Add new comment

15 + 1 =