நரேந்திர மோடி அரசு பாரபட்சம் காட்டுவதாக மல்லையா குற்றச்சாட்டு


மத்தியில் ஆளும் பாதிய ஜனதா கட்சி பாரபட்சமாக நடந்துக் கொள்வதாக தொழிலதிபர் விஜய் மல்லையா குற்றஞ்சாட்டியுள்ளார்.

 

வங்கிகளில் 9 ஆயிரம் கோடி ரூபாய் கடன் பெற்று திரும்ப செலுத்தாத தொழிலதிபர் விஜய் மல்லையா வெளிநாட்டுக்குத் தப்பிச்சென்றுவிட்டார்.

 

இந்நிலையில், கடும் நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்துக்கு மத்திய அரசு உதவி செய்வதை விமர்சித்து மல்லையா ட்விட்டர் பதிவிட்டுள்ளார்.

 

கிங்ஃபிஷர் நிறுவனத்தில் பணிபுரிந்த ஊழியர்களின் நலனுக்காக 4 ஆயிரம் கோடி இருப்பு வைத்திருந்ததாகவும், அதை ஏற்றுக்கொள்ளாமல் வங்கிகள் மூலம் மத்திய அரசு முடக்கிவிட்டதாகவும் அவர் இந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

 

இதன் காரணமாக தன்னுடைய தலைசிறந்த விமான நிறுவனத்திற்கும், ஊழியர்களுக்கும் இடையிலான தொடர்பு துண்டிக்கப்பட்டதாகவும், மத்திய பா.ஜ.க அரசு பாரபட்சமாக நடந்துக் கொள்வதாகவும் விஜய் மல்லையா குற்றஞ்சாட்டியுள்ளார்.

Add new comment

10 + 4 =