விண்வெளி ஆடை இல்லாததால் தவறிபோன வரலாறு


இதுவரை நிகழாமல் இருந்த பெண்கள் மட்டுமே விண்வெளியில் நடக்க இருந்த நடவடிக்கையை நாசா ரத்து செய்துவிட்டது.

 

விண்வெளியில் இருக்கின்ற பெண் விண்வெளி வீராங்கனைகள் இருவர் விண்கலத்தைவிட்டு வெளியே செல்லும்போது அணியும் ஆடை பற்றாக்குறையால் இந்த முயற்சி கைவிடப்பட்டது.

 

சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருக்கின்ற கிறிஸ்டினா கோச், ஆனி மெக்கிளேன் என்ற இரு பெண் விண்வெளி வீராங்கனைகள் விண்வெளி நிலையத்திற்கு வெளியே சென்று பேட்டரிகளை பொருத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்தது.

 

விண்வெளி வீராங்கனைகள் அணிகின்ற மீடியம் அளவிலான விண்வெளி உடை ஒன்றுதான் இருந்தது.

 

எனவே, ஆண் விண்வெளி வீரர் ஒருவரோடு சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து வெளியேறிய கோச் பேட்டரிகளை. பொருத்தியுள்ளனர்.

 

விண்வெளி ஆடை பற்றாக்குறையால், நடைபெற இருந்த வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வு நடைபெறாமல் போய்விட்டது.

Add new comment

5 + 0 =