சீன அதிபர் மீது மனித குலத்திற்கு எதிரான குற்றச்சாட்டு


சீனாவின் அதிபர் ஷி ஜின்பிங்-கிற்கு எதிராக மனித குலத்திற்கு எதிராக குற்றம் புரிந்ததாக பிலிப்பீன்ஸ் மீனவர் குழு ஒன்றும், இரண்டு முன்னாள் உயர் அதிகாரிகளும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

 

தென் சீனக் கடலில் சுற்றுச்சூழல் சேதங்களை ஏற்படுத்துவது  இந்த குற்றச்சாட்டில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

 

சீனாவின் அதிபருக்கும், அதிகாரிகளுக்கும் எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் மார்ச் 15ம் தேதி முறையான புகார் அளிக்கப்பட்டுள்ளது.

 

இதற்கு ஆதரவாக 18 ஆயிரத்து 745 பதிவுகள் ஆன்லைனில் பதிவிடப்பட்டுள்ளன.

 

இது மிகவும் தைரியமான நடவடிக்கை என்று பிலிப்பீன்ஸின் கத்தோலிக்க ஆயர் ஒருவர் தெரிவித்திருக்கிறார்.

 

இந்த தைரியமான பெண் இந்த கோலியாத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் சந்திக்க தைரியமாக இருப்பதாக சோர்சோகன் மறைமாவட்ட அயர் அர்டுரோ பாஸ்டெஸ் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

Add new comment

7 + 2 =