மறைபரப்பாளர்களாக மாற அழைப்புபெறும் ஹாங்காங் கத்தோலிக்கர்கள்


ஹாங்காங் கத்தோலிக்கர்கள் வரலாற்று நிகழ்வுகளை கற்றுகொள்ள ஊக்கமூட்டப்படுகிறார்கள். இதன் மூலம் சீன எல்லையில் மதத்தை பரப்புகின்ற மறைபரப்பாளர்களாக அவர்கள் மாற முடியும் என்று வலியுறுத்தப்படுகிறது.

வரலாற்று ஆய்வுகளை நடத்துவது உண்மைகளை வெளிக்கொணர்வதை மட்டுமே நோக்கமாக கொண்டிருக்கவில்லை. நமது முன்னோர்கள் நமக்கு என்ன விட்டு சென்றார்கள் என்கிற விழிப்புணர்வை பெறுகிறோம் என்று ஹாங்காங்கிலுள்ள சீன பல்கலைக்கழகத்தில் கத்தோலிக்க ஆய்வு மையத்தின் இயக்குநர் அருட்தந்தை லுயிஸ் ஹா கி-லோன் தெரிவித்துள்ளார்.

 

“20ம் நூற்றாண்டில் ஹாங்காங் திருச்சபையின் மறைபரப்பு வரலாறு” பற்றிய விரிவுரை தொடரை தொடங்கிய மார்ச் 23ம் தேதி நடைபெற்ற விழாவில் பேசியபோது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

 

இந்த விரிவுரை தொடர் டிசம்பர் மாதம் நிறைவடையும். இந்த நிகழ்வு கத்தோலிக்க ஆய்வு மையமும், மறைமாவட்ட ஆவணக்காப்பகமும், குங் காவ் போ என்கிற மறைமாவட்ட வாரச் செய்தித்தாளும் ஆகிய மூன்றும் இணைந்து நடத்தி வருகிறது.

 

வரலாற்றை படிப்பது முற்காலத்தவரின் அனுபவத்தை கிரகிக்க செய்வதோடு, நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை சிந்திக்க தூண்டுகிறது என்று மறைமாவட்ட ஆவணக் காப்பாளராகவும் இருக்கின்ற இந்த அருட்தந்தை ஹா கூறியுள்ளார்.

Add new comment

10 + 4 =