பணம் ஈட்டும் சடங்குகளை நிறுத்த வியட்நாம் பௌத்த துறவிகளுக்கு ஆணை


மோசமான கர்மாவை அகற்றும் சடங்குகளை வணிக ரீதியில் ஒப்புக்கொடுப்பதை நிறுத்த வேண்டுமென வியட்நாமின் வடக்கில் அமைந்திருக்கும் பிரபலமான பகோடாவிலுள்ள பௌத்த் துறவிகளிடம் அரசு அதிகாரிகள் ஆணையிட்டுள்ளனர்.

 

சியாங் நின்க் மாகாணத்திலுள்ள ஒங் பி நகரின் ஒரு மலைச்சரிவில் கட்டப்பட்டுள்ள பா வாங் பகோடாவின் பௌத்த துறவிகள் அதிக பணத்தை பெற்று கொண்டு மோசமான கர்மாவை நீக்குகின்ற சடங்குகளுக்கு கட்டணங்களை நீக்க வேண்டுமென ஆணையிட்டுள்ளனர்.

 

மக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்த காரணமாக இருப்பதும், அவ்விடத்தில் பாதுகாப்பு ஒழுங்கின்மை ஆபத்தை உருவாக்குகின்ற இந்த சடங்குகளை நிறுத்த வேண்டுமென இந்த பக்கோடாவின் தலைமை துறவியர் வணக்கத்திற்குரிய திச் ட்ருக் தாய் மின்க்-குவிடம் ஒங் பி நகரின் மக்கள் குழு மார்ச் 24ம் தேதி ஆணை வழங்கியுள்ளது.

 

இந்த அதிகாரிகளின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த பக்கோடா அடுத்த நாள் அதனுடைய இணையதளத்தை மூடிவிட்டது.

 

இந்த அரசு ஆணை தொடர்பாக வெளிப்படையாக எந்த கருத்தையும் வெளியிடவில்லை.

 

அலைந்து திரியும் ஆன்மாக்களுக்கு ஆணையிடவும், மோசமான கர்மாவை நீக்கிவிடவும் இரண்டு நாட்கள் சடங்குகளை இந்த பக்கோடாவின் துறவியர் நடத்துவதை வழக்கமாக கொண்டிருந்தனர்.

Add new comment

14 + 2 =