லண்டனில் நீரவ் மோடி கைதுக்கு நரேந்திர மோடி காரணமல்ல – மம்தா பானர்ஜி


நீரவ் மோடி லண்டனில் கைது செய்யப்பட்டதற்கு இந்திய தலைமையமைச்சர் நரேந்திர மோடி எந்த விதத்திலும் காரணமில்லை; லண்டன் நிருபர் எடுத்த சமீபத்திய பேட்டியே காரணம் என்று மேற்கு வங்காள முதலமைச்சர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.

 

மும்பையைச் சேர்ந்த வைர வியாபாரியான நீரவ் மோடி, பஞ்சாப் நேஷனல் வங்கியில் கடன் மோசடி செய்துவிட்டு வெளிநாட்டுக்குத் தப்பி ஓடிவிட்டார்.

 

சமீபத்தில், லண்டனைச் சேர்ந்த நிருபர் நீரவ் மோடியை அடையாளம் கண்டு, வங்கி மோசடி குறித்து கேள்வி கேட்டார்.

 

இந்நிலையில், நீரவ் மோடி லண்டனில் கைது செய்யப்பட்மு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

 

அவர் கோரிய பிணை மனுவும் நிராகரிக்கப்பட்டுள்ளது.

 

மக்களவைத் தேர்தல் நேரத்தில் நீரவ் மோடியின் கைது போன்ற பல அதிரடி நடவடிக்கைகளை பாஜக அரசு நடத்தி காட்டும்.

 

ஆனால், நீரவ் மோடியின் கைதுக்கு நரேந்திர மோடி எந்தவிதத்திலும் காரணம் கிடையாது என்று மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.

Add new comment

2 + 1 =