பாதுகாப்பு பெறும் மலேசிய தேவாலயங்களும், கோயில்களும்


கடந்த வாரம் நியூசிலாந்திலுள்ள இரண்டு மசூதிகளில் நடைபெற்ற கொடூத தாக்குதல்களை அடுத்து, மலேசியாவில் பயங்கரவாத எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளது.

 

தென்கிழக்கு ஆசியாவில் பல்முக கலாசார நாடுகளில் ஒன்றான நியூசிலாந்தில் நடைபெற்ற இந்த தாக்குதல்களை அடுத்து, முஸ்லிம்கள் அல்லாத வழிபாட்டு தலங்கள் மீது பதிலடி தாக்குதல்கள் நடத்தப்படும் ஆபத்தை தவிர்க்க, மார்ச் 19ம் தேதி முதல் தேவாலயங்களிலும், கோயில்களிலும் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளதாக உள்ளூர் காவல்துறை தெரிவித்திருக்கிறது.

 

நியூசிலாந்து தாக்குதலுக்கு பின்னர், காவல்துறையின் எல்லா தலைவர்களிடமும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றி விவாதித்துள்ளதாக தேசிய காவல்துறை தலைவர் முகமது ஃபுசி தெரிவித்துள்ளார்.

 

நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. கவலை வேண்டாம். நாங்கள் எப்போதும் உயர் பாதுகாப்பில் இருந்து வருகிறோம் என்று அவர் தெரிவித்தார்.

 

நியூசிலாந்தி்வல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் குறைந்தது 50 கொல்லப்பட்டனர்.

Add new comment

3 + 5 =