பெரிய வியாழன் நடைபெறும் தேர்தலை தள்ளி வைக்க மறுத்த தேர்தல் ஆணையம்


தமிழ் நாட்டில் ஏப்ரல் 18ம் தேதி பெரிய வியாழக்கிழமை நடைபெற இருக்கும் இந்திய மக்களவை தேர்தலை வேறொரு நாள் மாற்றி வைக்க தேர்தல் ஆணையம் மறுத்துவிட்டதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

அன்றைய தேர்தலை மாற்றி வைக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்திரவிட வேண்டும் என்று மதுரை பேராயர் ஆன்றணி பாப்புசாமி அவர்களால் அளிக்கப்பட்ட புகார் விசாரணைக்கு வந்தபோது தேர்தல் ஆணைய கவுன்சிலை சேர்ந்த நிரஞ்சன் ராஜகோபாலன் உயர் நீதிமன்றத்தில் இந்த செய்தியை தெரிவித்தார்.

 

வியாழக்கிழமை நடைபெறும் அடுத்த விசாரணையின்போது, அபிடவிட் சமர்பிக்க நீதிபதிகள் எஸ்.மணிகுமார் மற்றும் சுப்பிரமணியன் அடங்கிய அமர்வு ராஜகோபாலனிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

 

ஆனால், தேர்தல் ஆணையத்திடம் பொதுநல மனு ஒன்றை வழங்கியுள்ளதாகவும், அதற்கு இதுவரை பதில் வரவில்லை என்றும் பேராயர் சார்பாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

50 லட்சம் கிறிஸ்தவர்கள் வாழும் தமிழ் நாட்டில் ஏப்ரல் 14ம் தேதி தொடங்கும் புனித வார சடங்குகள் ஏப்ரல் 21ம் தேதி உயிர்ப்பு பெருவிழாவோடு நிறைவடைகிறது.

 

பெரிய வியாழக்கிழமை தமிழ் நாட்டில் தேர்தல் நடைபெறுவதால், அன்றைய நாளும், பெரிய வெள்ளிக்கிழமையும் சடங்குகள் பாதிகக்ப்படும் என்று இந்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.    

Add new comment

16 + 4 =