கசகஸ்தானின் 30 ஆண்டுகால அதிபர் பதவி ராஜினாமா


சோவியத் ஒன்றியம் உடைந்த பின்னர். கசகஸ்தான் தோன்றியது முதல் 30 ஆண்டுகள் அதிபராக பதவி வகித்த நர்ஸுல்தான் நாஸர்பாயேவ் ராஜினாமா செய்துள்ளார்.

 

இது தொடர்பாக நடைபெற்ற அரசு விழாவில் இடைக்கால அபதிராக காஸிம் ஜோமார்ட் டாகாயேவ் பதவியேற்றுள்ளார்.  

 

தொலைக்காட்சியில் உரையாற்றிய நர்ஸுல்தான், நாடு சுதந்திரம் அடைந்த காலத்திலிரந்து அதிபராக பொறுப்பேற்று வருவதில் இருந்து விலகவதாக அறிவித்தார்.

 

புதிய அதிபருக்கான பதவியேற்பு விழாவுக்கு நர்ஸுல்தான் வருகை தந்தார்.

 

புதிய அதிபர் காஸிம் ஜோமார்ட் டாகாயேவ் பதவியேற்ற சில நிமிடங்களிலேயே, தனது முதல் கடமையாக முன்னாள் அதிபரின் பெயரை கஸாக்குகளின் நகரமான அஸ்தானாவுக்கு சூட்ட இருப்பதாக கூறியுள்ளார்.

 

மேலான புரட்சியாளரான நர்ஸுல்தானின் தாக்கம் தொடர்ந்து நாட்டின் ஆட்சியில் இருக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

 

ஆளுங்கட்சிக்கும் அரசின் பாதுகாப்பு கவுன்சிலுக்கும் தலைவராக நர்ஸுல்தான் பொறுப்பேற்க வேண்டும் என்றும் புதிய அதிபர் கேட்டுக்கொண்டுள்ளார்.

 

கசகஸ்தானில் அதிக செல்வாக்கு வாய்ந்தது நாட்டின் பாதுகாப்பு கவுன்சிலாகும்.

 

ஆனால், இந்த ராஜினாமா பல நாட்கள் மக்கள் நடத்திய போராட்டங்களுக்கு பின்னர்தான் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Add new comment

10 + 5 =