மத அடக்குமுறை என அமெரிக்க கூறுவதை  விமர்சிக்கும் சீனா


சீனாவில் மத சுதந்திரம் குறைவு என அமெரிக்க மத விவகார தூதர் கூறியுள்ளதற்கு எதிராக ஹாங்காங்கிலுள்ள சீனத் தூதர் விமர்சனம் தெரிவித்துள்ளார்.

 

சீன வெளியுறவு அமைச்சகத் தூதரின் அலுவலகம் இது பற்றி கருத்து தெரிவிக்கையில், சீன மத கொள்கையையும், இறைநம்பிக்கைக்கான சுதந்திரத்தையும் கேடாக கூறும் தீங்கான தாக்குதல் இந்த கருத்து என தெரிவித்துள்ளது.

 

இந்த கூற்று உண்மைக்கு புறம்பாக தற்சார்பு எண்ணத்தையும் வெறுப்பையும் கொண்டதாக விளங்குகிறது என்றும் தெரிவிக்கப்பட்டு்ளளது.

 

ஹாங்காங்கில் நடைபெற்ற கூட்டத்தில் பேசுகையில், இறைநம்பிக்கையோடு சீனா போரிட்டு வருகிறது என்று அமெரிக்காவின் மத விவகார தூதர் பிரவுண்பேக் தெரிவித்திருந்தார்.

Add new comment

4 + 1 =