நியுசிலாந்து மசூதி தாக்குதலை கண்டித்த இந்தோனீஷியா


நியுசிலாந்தில் மசூதிகளில் நடைபெற்ற தாக்குதல்களில் குறைந்தது 50 பேர் கொல்லப்பட்டுள்ள நிலையில், பல்சமய உரையாடலை வளர்ப்பதை நியுசிலாந்து தொடர வேண்டுமென இந்தோனீஷிய மத தலைவர்கள் அழைப்புவிடுத்துள்ளனர்.

 

இந்த தாக்குதலை நடத்தியதாக இனம்காணப்பட்டுள்ள பிரென்டன் ஹாரிசன் டரொண்ட் என்பவர், அந்த தாக்குதலை நேரலை செய்து கொண்டே கிறைஸ்ட்சர்ச்சிலுள்ள அல் நுர் மற்றும் லின்வுட் மசூதிகளில் பலரையும் சுட்டு வீழ்த்தியுள்ளார்.  

 

அதில் இறந்த ஒருவர் இந்தோனீயர். மேலும் பல இந்தோனீஷியர்கள் காயமடைந்துள்ளனர்.

 

தாக்குதல் நடத்திய து்பபாக்கிதாரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ள நிலையில், இந்த தாக்குதலை அவர் தனியாகவே நடத்தியுள்ளதாக உள்ளூர் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

 

எந்தவொரு மத போதனைகளுக்கும், சாவதேச மனித குலத்திற்கும் எதிரான காட்டுமிரண்டி தனமான செயல்பாடு இதுவென இந்தோனீஷிய ஆயர்கள் பேரவையின் தலைவரும், ஜகார்த்தா உயர் மறைமாவட்ட பேராயருமான இக்னாசியஸ் சுஹார்யோ கண்டித்துள்ளார்.

 

இந்த கொடிய சம்பவம் நியுசிலாந்தில் பல்சமய மக்களிடையில் காணப்படும் நல்லுறவை அழித்துவிடாது என்று இந்தோனீஷிய கத்தோலிக்கர்கள் நம்புவதாகவும் அவர் கூறியுள்ளார்.

Add new comment

2 + 11 =