தப்பியேடிய நீரவ் மோடியை கைதுசெய்ய லண்டன் நீதிமன்றம் உத்தரவு


பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.15 ஆயிரம் கோடி கடன் பெற்றுவிட்டு அதனை திருப்பி செலுத்தாமல் லண்டனுக்கு தப்பி சென்றுள்ள வைர வியாபாரியும், தொழிலதிபருமான நீரவ் மோடியை கைது செய்ய லண்டன் வெஸ்ட் மினிஸ்டர்ஸ் நீதிமன்றம் திங்கள்க்கிழமை வாரண்ட் பிறப்பித்தது.

 

மத்திய அமலாக்கப்பிரிவு அதிகாரிகள், சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில்  நீரவ் மோடியை நாடு கடத்த அனுமதிக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் முறையிட்டுள்ள நிலையில் இந்த உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 

எனவே, நீரவ் மோடி விரைவில் கைது செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

காவல்துறை கைது செய்து நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்வதற்கு முன்னதாகவே கைது தடைக்கான பிணையை நீரவ் மோடி பெற்றுவிடுவார். பின்னர் அவரை இந்தியாவுக்கு நாடு கடத்தும் பணிகள் தொடங்கும் என்று நம்பப்படுகிறது.

 

இந்தியாவிலுள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.15 ஆயிரம் கோடி கடன் பெற்று மோசடி செய்தும், சட்டவிரோத பணப்பரிமாற்றம் செய்த வழக்கிலும் வைர வியாபாரி நீரவ் மோடி சிக்கியுள்ளார்.

 

ஆங்கில நாளேடு சமீபத்தில் வெளிட்ட செய்தியில், லண்டனில் வெஸ்ட் என்ட் பகுதியில் ஒரு சொகுசு அடுக்குமாடி குடியிருப்பில் நீரவ் மோடி வசிப்பதாக செய்தி வெளியானது.

Add new comment

1 + 0 =