Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
நியூசிலாந்து பயங்கரவாத தாக்குதல் - துப்பாக்கி வைத்திருக்கும் சட்டத்தில் திருத்தம்
நியூசிலாந்து மசூதிகளில் நடந்த பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து, துப்பாக்கி வைத்திருப்பதற்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்க அமைச்சரை முடிவு செய்துள்ளது.
நியூசிலாந்தின் கிழக்கு கடலோரத்தில் அமைந்துள்ள கிறைஸ்ட்சர்ச் நகரில் 2 மசூதிகளில் கடந்த வெள்ளிக்கிழமை நிகழ்ந்த துப்பாக்கிச்சூட்டில் 50 பேர் பலியானார்கள்.
இதனை பயங்கரவாத தாக்குதல் என்று அந்நாட்டின் தலைமையமைச்சர் ஜெசிந்தா உறுதி செய்தார்.
துப்பாக்கிச்சூடு நடத்தியதோடு, அந்த கொடூரத்தை ஃபேஸ்புக்கில் நேரடியாக ஒளிபரப்பிய ஆஸ்திரேலிய நாட்டைச் சேர்ந்த பயங்கரவாதி 25 வயதான பிரெண்டன் டாரண்ட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
நியூசிலாந்து சட்டப்படி 16 வயதிலேயே ஒருவர் சாதாரண துப்பாக்கியையும், 18 வயதில் பகுதியளவு தானியங்கி துப்பாக்கியையும் வாங்கலாம்.
எனவே, துப்பாக்கி வைத்திருப்பது தொடர்பான சட்டத்தில் திருத்தம் கொண்டு வர அமைச்சரவை முடிசு செய்துள்ளது.
10 நாட்களுக்குள் துப்பாக்கி சட்டத்தில் திருத்தம் கொண்டுவர முடிவு செய்யப்பட்டுள்ளது.
. இந்த தகவலை பிரதமர் ஜெசிந்தா பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார். அதே சமயம் எந்த மாதிரியான திருத்தங்கள் கொண்டுவரப்படும் என்பதை தெரிவிக்க அவர் மறுத்துவிட்டார்.
மசூதியில் நடந்த துப்பாக்கிச்சூடு காணொளியை சமூக வலைத்தளங்களில் நேரலை செய்த குற்றச்சாட்டில் 18 வயது இளைஞரை காவல்துறை கைது செய்தது.
நியூசிலாந்தில் நிகழந்த இந்த தாக்குதலின் எதிரொலியாக அண்டை நாடான ஆஸ்திரேலியாவின் புனித தலங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
Add new comment