திருத்தந்தையின் முன்னாள் ஆலோசருக்கு ஆறு ஆண்டுகள் சிறை


பாலியல் புகார் வழக்கில் திருத்தந்தை பிரான்சிஸின் முன்னாள் நிதி ஆலோசகர் கர்தினால் ஜார்ஜ் பெல்லுக்கு, 6 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

 

தேவாலயத்தில் பாடகற் குழுவில் இருந்த இரண்டு சிறுவர்களுக்கு பாலியல் துன்புறுத்தல் வழங்கிய வழக்கில் வத்திக்கானின் மூத்த மதகுரவான ஜார்ஜ் பெல்லுக்கு இந்தத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

 

பிணை கிடைப்பதற்கு முன் மூன்று ஆண்டுகள் எட்டு மாதங்கள் இவர் கட்டாயம் சிறை தண்டனை அனுபவித்தாக வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

 

திருத்தந்தை பிரான்சிஸின்  முன்னாள் நிதி ஆலோசகரான கர்தினால் ஜார்ஜ் பெல், ஆஸ்திரேலியாவைச் சேர்ந்தவர்.

 

1990-களில் இவர் மெல்போர்ன் பேராயராக பணியாற்றியபோது, தேவாலய பாடகற்குழுவில் இருந்த 13 வயது சிறுவனை பலாத்காரம் செய்ததாகவும், அதை பற்றி கேட்க வந்த சிறுவனின் 13 வயது நண்பனையும் பலாத்காரம் செய்ததாகவும் கூறப்படுகிறது.

 

இதுதொடர்பாக சுமார் 20 ஆண்டுகள் கழித்து, 2015-ல் பாதிக்கப்பட்ட சிறுவன்  விக்டோரியா காவல் துறையிடம் புகார் கொடுத்த்தால், காவல்துறை மேற்கொண்ட விசாரணையில், ஜார்ஜ் பெல் வேறு சில பாலியல் குற்றங்களில் ஈடுபட்டிருந்ததும் தெரியவந்தது.

ஆனால், 77 வயதான ஜார்ஜ் பெல், இதைக் கடுமையாக மறுத்துள்ளார். இதுதொடர்பாக விக்டோரியா நீதிமன்றத்தில் ஜூன் 5-ம் தேதி மேல் முறையீடு செய்ய உள்ளதாகவும் அவர் அறிவித்துள்ளார்.

Add new comment

5 + 15 =