மத அடக்குமுறை பற்றிய அமெரிக்க தூதரின் விமர்சத்தை நிராகரிக்கும் சீனா


சீனாவில் மத சுதந்திரம் குறைவாக இருப்பது பற்றிய அமெரிக்க மத விவகார தூதரின் கூற்றுகளுக்கு எதிராக ஹாங்காங்கின் சீன ஆணையாளர் கருத்துக்கள் தெரிவித்துள்ளார்.

 

அமெரிக்க தூதர் சாம் பிரவுண்பேக்கின் கூற்றுகள் சீனாவின் மீதான தீய தாக்குதலாகவும், சீனாவின் மதக் கொள்கை, மத நம்பிக்கை சுதந்திரம் பற்றிய கொள்கைளை குறைத்து மதிப்பிடுவதுமாக உள்ளது என்று சீனாவின் வெளியுறவு விவகார அமைச்சகத்தின் ஆணையாளர் அலுவலகம் கூறியுள்ளது.

 

அமெரிக்க தூதரின் கூற்றுகள், உண்மையை திரித்து வதந்திகளையும், வெறுப்புணர்வும் கலந்து தெரிவிக்கப்பட்டதாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

 

மார்ச் 8ம் தேதி ஹாங்காங்கில் நடைபெற்ற கூட்டத்தின்போது ஆற்றிய 27 நிமிட உரையில், சீனா இறைநம்பிக்கையோடு போர் நடத்தி வருவதாக பிரவுண்பேக் தெரிவித்தார்.

 

சீன கம்யூனிஸ்ட் கட்சியால் மேற்கொள்ளப்படும் மத குழுக்கள் மீதான சித்ரவதை மற்றும் மிகவும் இறுக்கமான கட்டுப்பாடு ஆகியவற்றையும் பிரவுண்பேக் பட்டியலிட்டார்.

 

சீனாவின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதை அமெரிக்கா நிறுத்திக்கொள்ள வேண்டுமென சீனாவின் வெளியுறவு விவகார அலுவலக ஆணையாளர் கூறியுள்ளார்.

Add new comment

6 + 5 =