கடைசி பிரெக்ஸிட் வரைவு ஒப்பந்தமும் நிராகரிப்பு


பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறுவதற்கு முன்னதாக, அந்த ஒன்றியத்துடன் செய்துகொள்ள உருவாக்கப்பட்ட பிரெக்ஸிட் ஒப்பந்த வரைவை பிரிட்டன் நாடாளுமன்றம் மீண்டும் ஏற்றுக்கொள்ளவில்லை.

 

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து 16 நாட்களில் பிரிட்டன் வெளியேறவுள்ள நிலையில், இந்த வரைவு பிரிட்டன் நாடாளுமன்றம் ஏற்றுக்கொள்ளவில்லை.

 

 

இந்த மாதம் இறுதியில், பிரிட்டன் வெளியேறுகிறபோது, ஒப்பந்தம் ஏதும் இல்லாத நிலையில் வெளியேறுகின்ற சாத்தியக்கூறுதான் இப்போது நிலவுகிறது.

 

முதல் வரைவு ஒப்பந்தத்தை பிரிட்டன் நாடாளுமன்றம் கடந்த ஜனவரி மாதம் வரலாறு காணாதாக பெருவாரியான வாக்கு வேறுபாட்டில் ஏற்றுக்கொள்ளவில்லை.

 

ஒப்பந்தத்தை ஆதரிக்கும்படி பிரதமர் விடுத்த கடைசி நிமிட வேண்டுகோளையும் நாடாளுமன்ற உறுப்பினாகள் நிராகரித்து 149 வாக்குகள் வித்தியாசத்தில் தீர்மானம் நிறைவேற்ற விடாமல் செய்துள்ளனர்.

Add new comment

5 + 1 =