பீதியில் வாழும் பிலிப்பின்ஸ் திருச்சபை ஊழியர்கள்


இந்த ஆண்டு ஜனவரி மாத தொடக்கத்தில் காலை வேளையில் வந்த தொலைபேசி அழைப்பு ஒஃபிலியா கேன்டோரை தூக்கத்தில் இருந்து எழுப்பியது.

 

கிளர்ச்சிக்காரர்களுக்காக அமைதி பேச்சுவார்த்தையில் பங்கேற்றவர் கூட்டுக்கொல்லப்பட்டார் என்று அந்த தொலைபேசி அழைப்பு தகவல் அளித்தது. ஒஃபிலியா பெரும் அதிர்ச்சியடைந்தார்.

 

மத்தோடிஸ்ட் திருச்சபையின் ஊழியரான கேன்டோர், 1990ம் ஆண்டு தொடங்கி அமைதி பேச்சுவார்த்தையை நடத்த ஆவன செய்து வருகிறார்.

 

பிலிப்பீன்ஸ் பல்சமய அமைதி மன்ற செயலகத்தின தலைவரான அவர், உலக பல்சமய ஆயர்கள் மன்றத்தின் ஒருங்கிணைப்பாளராகவும் பணியாற்றி வருகிறார்.

 

அமைதிக்காக பணிபுரிவது மிகவும் சிக்கலான விடயம். வெளிநாடுகள் உள்பட பலர் இதில் ஈடுப்பட்டிருப்பதே இதற்கு காரணமாகும்.

 

சமீபத்தில் கிளர்ச்சியாளர்களுக்காக பேச்சுவார்த்தையாளர்களாக செயல்பட்டவர்கள் கைதாகும் வரை கேன்டேர் புகார் எதையும் வழங்கியதில்லை.

 

அரசுக்கும், கிளர்ச்சியாளாகளு்ககும் இடையில் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததால், பேச்சுவார்த்தையில் பங்கேற்றவர்களை அரசு கைது செய்துள்ளது.

 

ராணுவ நடவடிக்கை தொடர்ந்து பல டஜன்கணக்கான உயிர்களை பறித்துவிட்டது.

 

இந்த மோதலுக்கு முடிவை காண தோல்வியுறுவதுதான், இந்த அரசின் மோசமான செயல்பாடாக இருக்கும் என்று கேன்டேர் தெரிவித்தார்.

 

இதுபோல அமைதியை ஆதரித்து பேச்சுவார்த்தையை ஊக்குவித்த திருச்சபை ஊழியர்கள் பலரும் தற்போது பீதியில் உறைந்து போய்யுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Add new comment

8 + 2 =