மன்னா புதைக்குழி எந்த காலத்தை சேர்ந்தது?


இலங்கையிலுள்ள மன்னாரில் சமிபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைக்குழி ஐரோப்பிய ஆதிக்க காலத்திற்கு சொந்தமானது என தெரிவிக்கப்படுகிறது.

 

அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்திலுள்ள பீட்டா ஆய்வு நிறுவனம் நடத்திய கார்பன் சோதனையின் மூலம் இந்த முடிவு வெளியாகியுள்ளது.

 

இவை கி.பி 1477 – 1642ம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தை சேர்ந்தது என்று கூறப்பட்டுள்ளது.

 

 

மன்னார் மனிதப் புதைக்குழியிலிருந்து எடுக்கப்பட்ட ஆறு மனித எச்சங்களின் மாதிரிகள், ஜனவரி மாதம் 25ஆம் தேதி சோதனைகளுக்கு அமெரிக்க நிறுவனத்திடம் வழங்கப்பட்டன.  

 

இந்நிலையில், இந்த அறிக்கையை மட்டுமே அடிப்படையாக வைத்து கொண்டு, இந்த மனித எச்சங்களின் காலத்தை நிர்ணயிக்க முடியாது என முன்னிலை வழக்கறிஞர் வி.எஸ்.நிரஞ்ஜன் கூறியுள்ளார்.

 

இந்த மனிதப் புதைக்குழியிலிருந்து எடுக்கப்பட்ட மனித எச்சங்களின் மாதிரிகள் மட்டுமல், அங்குள்ள மண் மாதிரி, ஏனைய பொருட்களும் ஆய்வுக்கு  உள்ளான பின்னரே சரியான முடிவுக்கு வர முடியுமென அவர் கூறியுள்ளார்.

Add new comment

5 + 6 =