ஈரோடு மஞ்சளுக்கு புவிசார் குறியீடு


ஈரோடு மஞ்சளுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளதால், விவசாயிகள் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளனர்

 

பத்து ஆண்டுகள் பேராட்டியதன் பயனாகத்தான் இந்த குறியீடு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

இந்தியாவில் மஞ்சள் உற்பத்தி செய்வதில் மிகவும் புகழ்பெற்ற இடம் தமிழ் நாட்டிலுள்ள ஈரோடு மாவட்டமாகும்.

 

ஈரோடு, கோவை, திருப்பூர் மஞ்சளுக்கு எப்போதும் தனி சுவையும்,  மணமும் இருப்பதால், அதற்கு வரவேற்பும் அதிகமாகவே உள்ளது.

 

ஈரோடு மாவட்ட மஞ்சளுக்கு புவிசார் குறியீடு வழங்குவதற்கு பல்வேறு தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது.

 

ஈரோடு மாவட்டத்தில் உள்ள கொடுமுடி, சிவகிரி, பவானி, கோபிசெட்டிபாளையம், அந்தியூர், சென்னம்பட்டி, சத்தியமங்கலம், தளவாடி மற்றும் திருப்பூர் மாவட்டத்தின் சில இடங்கள், கோயமுத்தூர் மாவட்டத்தில் விளைவிக்கப்படும் இந்த மஞ்சளுக்கு இனி உலகளவில் வரவேற்ப அதிகமாக இருக்கும்.

 

ஈரோடு மாவட்டத்தில் சின்ன நாடன் வகை மஞ்சள்தான் அதிகளவில் விளைவிக்கப்படுகிறது.

 

ஜூன்-ஜூலை மாதங்களில் பயிர் செய்து ஜனவரி மற்றும் மார்ச் மாதங்களில் அறுவடை செய்கின்றனர்.

 

எதிர்காலத்தில் சர்வதேச அளவில் மஞ்சள் ஏற்றுமதி, உற்பத்தியில் ஈரோடு மாவட்டம் தனியிடம் பெறும் வாய்ப்பு இதனால் ஏற்பட்டுள்ளது.

Add new comment

2 + 0 =