வெறுப்பை தூண்டியதாக கத்தோலிக்க செயற்பாட்டாளர் கைது


கடந்த மாதம் ஜகார்த்தாவில் நடத்தப்பட்ட பேரணியின்போது, கடந்த கால மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்டோர் பற்றி இந்தோனீசிய ராணுவத்தை குறிப்பிட்டு விமர்சித்து பேசியதற்காக கத்தோலிக்க மனித உரிமை செயற்பாட்டாளர் ரோபர்ட்டஸ் ராபர்ட்டை இந்தோனீசிய காவல்துறை கைது செய்துள்ளது.

 

ராணுவ அதிகாரிகளை அரசு அமைச்சர்களாகவும், அதன் நிறுவனங்களை அரசு முகமைகளாகவும் கொண்டு வருவதற்கான நடவடிக்கைக்கு எதிராக இந்த போராட்டம் நடைபெற்றது.

 

செயற்பாட்டாளர் ராபர்ட்டஸ் ராபர்ட் வெறுப்புணர்வை தூண்டும் விதமாக பேசியதாக சந்தேகம் ஏற்பட்டுள்ளது என்று தேசிய காலவ்துறை செ்யதி தொடர்பாளர் ஜெனரல் டிடி பிராசெட்யோ கூறியுள்ளார்.

 

வழக்கறிஞரும், ஜகார்த்தா ஸ்டேட் பல்கலைக்கழக பேராசிரியருமான ராபர்ட், 2008ம் ஆண்டு மின்னணு பரிமாற்ற தகவல் தொடர்பு சட்டத்தை மீறியதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்.

 

இந்த சட்டத்தை மீறுவோர் 18 மாத சிறை தண்டனை பெறுவர் என்று கூறப்படுகிறது.

 

யு டியூப் வலைதளத்தில் பதிவிடப்பட்டுள்ள பிப்ரவரி 28ம் தேதி நடைபெற்ற பேரணியின் காணொளியில், ராபர்ட் ராணுவத்தை விமாசித்து பாடிய பாடல் ஒன்றை உள்ளது.

 

மார்ச் 7ம் தேதி ராபர்ட் காவலில் இருந்து விடுவிக்கப்பட்டாலும், புலனாய்வு இன்னும் நடைபெற்று வருகிறது.

 

இந்த குற்றத்தை செய்யவில்லை என்று ராபர்ட் தொடர்ந்து கூறி வருகிறார்.

 

இந்த பாடல் முந்தைய ராணுவத்தைதான் விமர்சிக்கிறது என்றும், தற்போதைய ராணுவத்தை அல்ல என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.

Add new comment

4 + 4 =