ஏழை குழந்தைகளுக்கு உணவூட்ட உண்ணாநோன்பு - கர்தினால் டேக்லே


இரக்க செயல்களை செய்வதன் மூலம் தவக்காலத்தை கடைபிடிக்க, குறிப்பாக ஏழை குழந்தைகளுக்கு உணவு வழங்க உதவ பிலிப்பின்ஸ் கத்தோலிக்கர்களை கர்தினால் லுயிஸ் அன்றணியோ டேக்லே கேட்டுக்கொண்டுள்ளார்.

 

பிலிப்பின்ஸ் திருச்சபையின் ஹாபாக்-எஎஸ்ஏ பணித்திட்டத்தின் ஒரு பகுதியான மணிலா உயர் மறைமாவட்ட “பாஸ்ட்2ஃபீட்” உணவு உதவி பரப்புரைக்கு அனுப்பப்படும் பணத்தை நன்கொடையாக வழங்குவதன் மூலம், கடவுளோடு இருக்கும் உணவை மக்கள் ஆழமாக்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

 

12 வயது வரையான குழந்தைகளிடம் காணப்படும் ஊட்டுச்சத்து குறைபாட்டை குறைத்துவிடும் நோக்கத்தோடு தேசிய அளவில் இந்த உணவு உதவி திட்டம் நடைபெற்று வருகிறது.

Add new comment

5 + 12 =