Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
ரஃபேல் ஒப்பந்த ஆவணங்கள் திருடு போய்விட்டதாக மத்திய அரசு தகவல்
பாரதிய ஜனதா கட்சியின் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு பிரான்ஸ் அரசுடன் மேற்கொண்ட ரஃபேல் ஒப்பந்தம் ஆவணங்கள் திருட்டு போய்விட்டதாக மத்திய அரசு உச்ச நீதிமன்றத்திடம் தெரிவித்துள்ளது.
இந்த ஒப்பந்தம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகின்ற நிலையில், இந்த ஒப்பந்தத்தில் ஊழல் நடந்துள்ளதாக பிரபல ஆங்கில நாளேடு பல்வேறு ஆதாரங்களை வெளியிட்டது.
126 போர் விமானங்களுக்கு பதிலாக வெறும் 36 ராபேல் போர் விமானங்களை வாங்குவதற்கு இந்திய தலைமையமைச்சர் எடுத்த முடிவால், 42 சதவீத விலை அதிகரிப்பு ஒவ்வொரு விமானத்திலும் ஏற்பட்டுள்ளதாக குற்றச்சாட்டும் எழுந்தது.
சமீபத்தில் வெளியான ஆதாரத்தில், கொள்முதலுக்கான வங்கி உத்தரவாதத்தை, இந்தியாவிற்கு பிரான்ஸ் அரசும், டசால்ட் நிறுவனமும் வழங்க மறுத்தது விட்டது தெரிய வந்துள்ளது.
2016ஆம் ஆண்டு ஜூலையில் பாதுகாப்புத்துறை அமைச்சகத்திற்கு இந்தியா ஆயுத போர்க்குழு அனுப்பிய அறிக்கையை இந்த செய்தித்தாள் சான்றாக சுட்டிக் காட்டியுள்ளது.
ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பான சீராய்வு மனு மீது உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.
இதில், ஆஜரான மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் வேணுகோபால் ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பான ஆவணங்கள் திருட்டு போய்விட்டதாக தெரிவிககப்பட்டுள்ளது.
ரஃபேல் ஆவணங்களை பிரபல ஆங்கில நாளேடு பாதுகாப்பு அமைச்சகத்தில் இருந்து திருடி வெளியிட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆவணத் திருட்டு அரசாங்க ரகசிய சட்டப்படி குற்றமாகும் என்றும் உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதால் இந்த செய்தித்தாள் மீது நடவடிக்கை எடுக்கப்படலாம் என்ற ஐயம் ஏற்பட்டுள்ளது.
அரசு பற்றிய செய்தியை வெளியிடும் பத்திரிகைகளுக்கு தொல்லை கொடுப்பது பாரதிய ஜனதா கடசியின் முந்தைய பல நடவடிக்கைகள் காட்டுகின்றன.
பல பத்திரிகையாளர்கள் மீது வன்முறையும் கட்டவிழ்த்து பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Add new comment