இந்து மத்தினருக்கு எதிராக பேசியதால் அமைச்சர் பதவி நீக்கம்


இந்து மத சமூகத்தை இழிவாக பேசியதால் பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண தகவல் மற்றும் பண்பாட்டுத் துறை அமைச்சர் ஃபாயஸ் உல் ஹாசன் சோஹன் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

 

கட்சியின் கட்டளைபடி அவர் பதிவியை ராஜினாமா செய்துள்ளார்.

 

சோஹன் சொன்ன கருத்துக்கும் பஞ்சாப் மாநில அரசுடைய கருத்தல்ல. அவரது கருத்தை பஞ்சாப் மாநில அரசு ஏற்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்துக்கள் உள்பட எந்தவொரு சிறுபான்மையினரையும் அவமதிக்கின்ற, புண்படுத்துகிற கருத்துக்களையும், செயல்களைளும், பஞ்சாப் அரசு அனுமதிப்பதில்லை என்று பங்சாப் மாகணா முதல்வர் கூறியுள்ளதாக அவரது செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார்.

 

அமைதி நிலவ செய்ய, கைதியாக பிடித்து வைத்திருந்த அபிநந்தனை விடுவித்த பின்னர், சிறுபான்மையினரை பாதுகாக்க பாகிஸ்தான் அரசு செயல்படும் என்பதை காட்டும் விதமாக இம்ரான் அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

 

பாகிஸ்தான் சகிப்புத்தன்மை என்கிற முதல் தூணால் கட்டியமைக்கப்பட்டுள்ளது. எனவே, அதற்க அப்பாற்பட்ட கருத்துக்களை ஏற்பதில்லை என்று ட்விட்டர் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Add new comment

14 + 3 =